மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐயோ பாவம்! மாமாவின் கட்சியை குமாஸ்தா கட்சி என்று சொன்ன.. ராஜ் தாக்கரேவுக்கு தேர்தலில் பெரும் அடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Haryana assembly elections 2019 | BJP leading | ஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை

    மும்பை: சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேயின் மருமகன் ராஜ் தாக்கரேவின் மகாராட்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட இன்னும் வெற்றி கணக்கை ஆரம்பிக்கவில்லை.

    சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேயின் மருமகன் ராஜ் தாக்கரே மகாராட்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு 2006 ஜனவரியில் தனது மாமாவின் கட்சியிலிருந்து விலகி ஆரம்பித்தார்.

    ஆரம்பித்ததில் வடமாநிலத்தவருக்கு எதிராக இந்த கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். இது வன்முறையாக மாறி வடமாநிலத்தவர் பலர் அடித்துவிரட்டப்பட்டனர். இதனால் பெரும் பிரச்சனை உருவானது.

    ஹரியானா... காங்கிரஸ் திடீர் எழுச்சி.. மெஜாரிட்டியை பெற முடியாமல் பாஜக தவிப்புஹரியானா... காங்கிரஸ் திடீர் எழுச்சி.. மெஜாரிட்டியை பெற முடியாமல் பாஜக தவிப்பு

    2014 ல் ஒன்று மட்டுமே

    2014 ல் ஒன்று மட்டுமே

    இந்த கட்சி 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் 13 இடங்களில் வென்றது.அடுத்து 2014ல் நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அத்துடன் 3.7 சதவீத வாக்குகள் தான் கடந்த தேர்தலில் பெற்றது.

    ஒன்றுகூட இல்லை

    ஒன்றுகூட இல்லை

    இந்த முறை அதாவது 2019 சட்டமன்ற தேர்தலில் மகாராட்டிரா நவநிர்மான் சேனா கட்சி இதுவரை ஒரு இடத்தில் கூட வெற்றி கணக்கையோ முன்னிலை கணக்கையோ ஆரம்பிக்கவில்லை.

    ஆதரவு இல்லை

    ஆதரவு இல்லை

    மாமாவின் கட்சியை குமாஸ்தா கட்சி என்று சொல்லி புதுக்கட்சி ஆரம்பித்த ராஜ்தாக்கரே மண்ணின் மைந்தர் கொள்கையை ஆழமாக கடைபிடித்து வருகிறார். ஆனால் அவருக்கு மகாராஷ்டிராவில் ஆதரவு என்பது பெரிதாக கிடைக்கவில்லை.

    காங்கிரஸ் 2வது இடம்

    காங்கிரஸ் 2வது இடம்

    தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் ராஜ்தாக்கரேவின் மாமா உத்தவ் தாக்கரேவின் கட்சியான சிவசேனா கட்சி இணைந்து 167 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    English summary
    Raj Thackeray’s Maharashtra Navnirman Sena (MNS) is yet to open its account. The MNS had decided to fight the elections at the 11th hour. All eyes are on whether the party can eat into the Sena’s vote bank of Marathi manoos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X