மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டிலேயே மோசமான பாதிப்பு.. மகாராஷ்டிராவில் லாக்டவுன் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் வரும் மே 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Lockdown 4.0| நாடு முழுவதும் மே 31 வரை தொடரும் ஊரடங்கு... மத்திய அரசு அறிவிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி மே 17ம் தேதியான இன்று வரை நாடு முழுவதும் பொதுமுடக்கம் ( லாக்டவுன்) அறிவிக்கப்பட்டது. இந்த பொது முடக்கம் இன்றுடன் 55 நாட்கள் அமலில் இருந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    Maharashtra extends lockdown till May 31

    ஏனெனில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்து விட்டது. சுமார் 2800க்கும் அதிகமானோர் இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

    இதில் நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மாகாராஷ்டிரா மாநிலம் தான். அங்கு 30700 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1135 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 18555 பேர் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தானேவில் 3834 பேரும், புனேவில் 3647 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவுரங்காபாத், நாசிக், ராய்காட், சோலாபூர், பல்கார், ஜலோகான், அகோலா சதரா, அமராவதி உள்பட 13க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 100க்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காதலருடன் சாப்பிட வந்த நியூசி. பிரதமர்.. ஸாரி சீட் ஃபுல் ஆயிருச்சு.. திருப்பி அனுப்பிய ஹோட்டல்!காதலருடன் சாப்பிட வந்த நியூசி. பிரதமர்.. ஸாரி சீட் ஃபுல் ஆயிருச்சு.. திருப்பி அனுப்பிய ஹோட்டல்!

    தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை தடுக்க மேலும் 14 நாட்களுக்கு லாக்டவுனை நீட்டிக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில வரும் மே 31 வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பஞ்சாப், மிசோரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்த நிலையில் மகாராஷ்டிராவும் லாக்டவுனை நீட்டிக்க இப்போது முடிவு செய்துள்ளது

    English summary
    Maharashtra has decided to extend the lockdown till May 31. After Punjab, Mizoram and Telangana, Maharashtra has become the latest state to extend restrictions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X