மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் வெற்றி.. சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra Floor Test Updates : சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு !

    மும்பை: மகாராஷ்டிராவில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றுது. இதன் மூலம் மகாராஷ்டிரா சட்டசபையில் உத்தவ் தாக்கரே தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

    கடைசியில் மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது . கடந்த திங்கள் கிழமை அங்கு பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார். இதனால் அங்கு அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Maharashtra Floor test: Sena alliance CM Uddhav proves his majority

    இதையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    அதேபோல் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபியின் ஜெயந்த் பாட்டில், சஹான் புஜ்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலாசாகிப் தோரட், நிதின் ராவத் உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இன்று உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது.

    இதற்காக சிவசேனா கூட்டணி தங்கள் எம்எல்ஏக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பியது.சட்டசபைக்கு தவறாமல் வர வேண்டுமென்று எம்எல்ஏக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பியது. அம்மாநில சட்டசபை தற்காலிக சபாநாயகராக என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்தினார். பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கோலம்ப்கருக்கு பதிலாக இவர் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    சட்டசபையில் வாக்குசீட்டு அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. சட்டசபையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசும் போது. இந்த சட்டசபை விதிகளின் படி கூடவில்லை. அவைக்கு முன் தேசிய கீதம் கூட பாடப்படவில்லை . இது விதிக்கு முரணானது.

    உத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்!உத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்!

    அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச கூட எனக்கு அனுமதி இல்லை என்றால், நான் ஏன் அவையில் இருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நேற்று இரவோடு இரவாகத்தான் எங்களுக்கு தெரிவித்தனர். சபாநாயகரை தேர்வு செய்யாமல், முதல்முறையாக மகாராஷ்டிராவில் தற்காலிக சபாநாயகரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது, என்றார்.

    ஆனால், கவர்னர் அனுமதியுடன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் அனைத்தும் விதிப்படிதான் நடக்கிறது- தற்காலிக சபாநாயகர் எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் பதிலடி கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த பாஜகவினர், மகாராஷ்டிரா சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து தேவேந்திர பட்னாவிஸ் உட்பட அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து வாக்கெடுப்பு நடந்தது. மகாராஷ்டிராவில் 288 இடங்களில் 145 இடங்கள் இருந்தாலே பெரும்பான்மை கிடைத்துவிடும். ஆனால் சிவசேனா கூட்டணிக்கு அதைவிட அதிக இடங்கள் உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றுது. இதன் மூலம் மகாராஷ்டிரா சட்டசபையில் உத்தவ் தாக்கரே தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

    இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு 169 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். பாஜகவினர் யாரும் எதிர்த்து வாக்களிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார்கள். உத்தவ் தாக்கரேவிற்கு ஆதரவாக சிவசேனா 57 வாக்குகள், ஆர்எச்எஸ்பி 1 வாக்கு,காங்கிரஸ் 45 வாக்குகள், தேசியவாத காங்கிரஸ் 53 வாக்குகள் அளித்தது. இந்த வாக்கெடுப்பில் ஆல் இந்தியா மஜ்லிஸ் கட்சி, சிபிஐ (எம்), எம்என்எஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கவில்லை. இதனால் மகாராஷ்டிரா சட்டசபையில் உத்தவ் தாக்கரே தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

    இன்று மட்டுமின்றி நாளையும் அவை நடக்க உள்ளது. இந்த நிலையில் நாளை சபாநாயகர் தேர்தல் நடந்து நாளையே நிரந்தர சபாநாயகர் தேர்வாகி, அவர் தன்னுடைய பெரும்பான்மையை அவையில் நிரூபிப்பார். அதன்பின் அவையில் புதிய அமைச்சர்கள் எல்லோரும் அறிமுகம் செய்யப்படுவார்கள்.

    மேலும் நாளை அவையின் எதிர்கட்சி தலைவரும் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    English summary
    Maharashtra: Floor test today, Sena alliance CM Uddhav to prove his majority in the assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X