மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் இறந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு பிரேத பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

மும்பை: எதனால் இறந்தார்கள் என்பதை அறியவும், இறந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை அறியவும், இறந்தவர்களின் உடலை உடனடியாக ஒப்படைக்கவும், ஆன்டிஜென் எனப்படும் நோய் எதிர்ப்பு பிரேத பரிசோதனை மேற்கொள்ள மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கொரோன தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. 29,114 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பை, தானே, புனே ஆகிய இடங்களில் முறையே 8,109, 4,754, 4,134 என்று அதிகளவில் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். ஜல்காவன், நாசிக், நாக்பூர் ஆகிய மாவட்டங்கள் உள்பட மொத்தம் 1000 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

Maharashtra government has ordered for antigen tests on dead bodies

மகாராஷ்டிரா மாவட்டத்தில் இருக்கும் பிரேத கூடங்கள் அனைத்தும் நிரம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சசூன் மண்டல மருத்துவமனைக்கு தினமும் 40-50 வரை இறந்த உடல்கள் வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் வரும்போதே 15 பேர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். மேலும், நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 30-35 இறந்த உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. இவர்களில் பத்து பேரின் உடல்கள் இறந்தே கொண்டு வரப்படுகிறது. இவர்கள் எதனால் இறந்தனர் என்பது தெரியவில்லை.

இறந்தவர்களில் கொரோனா வந்து இறந்தவர்களை அடையாளம் காணும் வகையிலும், உடனடியாக உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ஆன்டிஜென் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி சோதனை மேற்கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கை, இந்த நோய் எதிர்ப்பு சோதனைகளில் தவறான தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு இறந்தவர்களின் உடலில் தடவியல் ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனை செய்ய மத்திய தடை வித்தித்து இருந்தது. இது சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் பணியாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறி இருந்தது. பிரேத பரிசோதனை செய்யாமலே, மருத்துவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தால் போதும் என்ற நிலை இருந்து வருகிறது.

இப்படியும் ஒரு உச்சம்- கொரோனா மொத்த பாதிப்பு, உயிரிழப்புகளில் ரஷ்யா, ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா!இப்படியும் ஒரு உச்சம்- கொரோனா மொத்த பாதிப்பு, உயிரிழப்புகளில் ரஷ்யா, ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா!

இனிமேல் மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் அனைத்து பிரேதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். இறந்தவர்கள் எதனால் இறந்தார்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் மனிதன் இறக்கும்போது எதனால்தான் இறந்தார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம், கவுரவமானதும் கூட என்று மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Maharashtra government has ordered for antigen tests on dead bodies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X