மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்.. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை.. ஆளுநர் அதிரடி!

திடீர் திருப்பமாக தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra Governor refers for President rule in the state

    மும்பை: திடீர் திருப்பமாக தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது.

    காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது. இதையடுத்து பெரிய கட்சி என்பதால் பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

    ஆதரவு இல்லை

    ஆதரவு இல்லை

    ஆனால் பாஜகவிற்கு சிவசேனா ஆதரவு இல்லை என்பதால், பாஜக எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. சிவசேனா தொடர்ந்து முதல்வர் பதவி கேட்டதால் இந்த கூட்டணி உடைந்தது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    நினைத்தார்கள்

    நினைத்தார்கள்

    மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் கடைசி வரை காங்கிரஸ், தேசியவாத கட்சி இரண்டும் சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்கவே இல்லை. இதனால் சிவசேனாவின் திட்டமும் தவிடு பொடியானது.

    கூடுதல் அவகாசம்

    கூடுதல் அவகாசம்

    இதனால்தான் ஆளுநர் பகத் சிங்கிடம் சிவசேனா கூடுதல் அவகாசம் கேட்டது. ஆனால் அவர் கூடுதலாக அவகாசம் கிடையாது என்று கூறிவிட்டார். அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க வரும்படி அழைத்தார். அவர்களுக்கு இரவு 8.30 மணி வரை நேரம் இருக்கிறது.

    திடீர் திருப்பம்

    ஆனால் திடீர் திருப்பமாக தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் அரசியல் சாசனத்தின்படி மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்த இயலாத நிலை நிலவி வருகிறது.

    அதனால் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமைக்க வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.

    English summary
    Maharashtra: Governor refers for President rule in the state after Shiv Sena and BJP failed to form the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X