மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று முதல் ஜனவரி 5 வரை.. இரவு நேர ஊரடங்கு அமல்.. மகாராஷ்டிராவில்.. !

மகாராஷ்டிராவில் நாளை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா முழுவதும் இன்று முதல் ஜனவரி 5-ம் தேதி வரை, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது.. இதில் டாப் லிஸ்ட்டில் இருந்தது மகாராஷ்டிரா மாநிலம்தான்.. அதிக அளவு மக்கள் இங்குதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 Maharashtra Govt announces night curfew from tomorrow

ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு, மிக மிக தீவிரமான நடவடிக்கைகளை கையில் எடுத்தது.. இறுதியில், கொரோனாவையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

இருந்தாலும், இன்னுல்ம் 6 மாசத்திற்கு மக்கள் எல்லாரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்... இந்த சமயத்தில்தான், இன்னொரு பகீர் நியூஸ் கிளம்பி உள்ளது..

காரிலிருந்தபடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்.. இங்கிலாந்தில் ஒளிரும் ரயில் சேவைகாரிலிருந்தபடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்.. இங்கிலாந்தில் ஒளிரும் ரயில் சேவை

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியானது.. இதனால், இந்திய அரசு விமான சேவையை உடனடியாக ரத்து செய்தது.. இந்நிலையில், 25-ம் தேதி கிறிஸ்துமஸ், அதையொட்டி புத்தாண்டு என வரிசையாக விழாக்காலம் வருகிறது.

இதுபோன்ற நேரத்தில் தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.. எனவே மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கியமான நகரங்களில் இன்று முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

English summary
Maharashtra Govt announces night curfew from tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X