மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா திருப்பம்.. பாவங்களின் மொத்த ஏஜென்டுகள்.. சிவசேனா தாக்கு.. காங்கிரஸும் கோபம்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள திருப்பம் குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: "நண்பர்களை பக்கத்தில் வைத்துக் கொள், ஆனால், எதிரிகளும் உங்க கூடவே இருக்காங்க.. இது ஒரு பைத்தியக்காரத்தனம், பாவங்களின் ஒட்டுமொத்த ஏஜென்டுகள்" இப்படி வார்த்தைக்கு வார்த்தை, மகாராஷ்டிர மாநில அரசியல் திருப்பத்தை கடுமையாக சாடி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் சிவசேனா, காங்கிரஸ் கட்சி மூத்த தலைகள்!

    பொழுது விடிந்தால் உத்தவ் தாக்கரே முதல்வர் என்ற எண்ணத்தில்தான் இருந்த நிலையில், பட்னவீஸ் அதிரடியாக முதல்வராகியிருக்கிறார். அஜீத் பவார் துணை முதல்வராகியிருக்கிறார்.

    இது எப்போது, எப்படி நடந்தது என்பது பிடிபடாத நிலையில், இந்த அரசியல் நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கான கருத்துக்கள், கண்டனங்கள், வரவேற்புகள், சர்ச்சைகள் கிளம்ப தொடங்கிவிட்டன.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவு அளப்பது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, இதற்கும் தேசிய காங்கிசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சரத்பவார் விளக்கம் அளித்த நிலையிலும், அவரது செயல்பாடுகள் மற்றும் தனித்து விடப்பட்டுள்ள கட்சியின் நிலை குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

    சஞ்சய் ராவத்

    சிவசேனா கட்சியின் மூத்ததலைவர் சஞ்சய் ராவத், அஜித்பவார் மகாராஷ்டிர மாநில மக்களின் முதுகில் குத்திவிட்டார், சரத்பாவருக்கு துரோகம் செய்துவிட்டார் என விமர்சித்துள்ளார். இவரது ஆதங்கமும், கோபமும் அவர் பதிவிட்ட "பாவங்களின் ஒட்டுமொத்த ஏஜென்டுகள்" என்ற ஒத்தை வரிகளியே வெளிப்பட்டுள்ளது.

    மிலிந்த தியோரா

    அதேபோல, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மிலிந்த தியோரா ஒரு ட்வீட் போட்டு இந்த அரசியல் நிகழ்வை விமர்சித்துள்ளார். "தி காட்பாதர்" சினிமா பட டயலாக்கை தன் ட்விட்டரில் பதிவிட்டு, அந்த பட போட்டோவையும் போட்டுள்ளார். "Keep your friends close, but your enemies closer ~ @godfathermovie" என்றிருக்கிறது அந்த ட்வீட், அதாவது "நண்பர்களை பக்கத்தில் வைத்துக் கொள், ஆனால், எதிரிகளும் கூடவே இருக்காங்க" என்கிறது அதன் அர்த்தம்!

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    இப்படி பலவாறாக விமர்சனங்கள் எழுந்தாலும், பாஜகவின் இந்த அதிரடியை, வியூகத்தை வரவேற்றும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதனை முதலில் வரவேற்றது பிரதமர் மோடிதான். மகாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்ற தேவி பட்னாவிஸ்ஜி மற்றும் அஜித் பவர்ஸ்பீக்ஸ்ஜி ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள், என்று ட்வீட் போட்டுள்ளார். அதேபோல, இப்படி ஒரு மகிழ்ச்சியைதான் அமித்ஷாவும் வெளிப்படுத்தி உள்ளார்.

    English summary
    maharashtra govt: shiv sena senior leader sanjay raut and maharashtra congress leader Milind Deora have criticized
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X