மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்னவீஸ் பதவியேற்பு.. ரகசியம் காத்த மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை.. நடந்தது என்ன.. விறு விறு தகவல்கள்

பதவியேற்பு விழாவை ரகசியமாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வைத்திருந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும். அந்த அளவுக்கு பக்காவாக நடந்து முடிந்து விட்டது தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்பு விழா.. அந்த அளவுக்கு பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகையும் ரகசியமாகவே வைத்திருந்தது.

    மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பின்னர் பாஜக தனிப் பெரும் கட்சியாக 105 உறுப்பினர்களுடன் உருவெடுத்தது. 2வது இடத்தை 56 வெற்றிகளுடன் சிவசேனாவும், 3வது இடத்தை 54 இடங்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், 3வது இடத்தை 44 உறுப்பினர்களுடன் காங்கிரஸும் பெற்றன.

     maharashtra govt: Devendra Fadnavis back as cm in Maharashtra

    இதையடுத்து பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பெரும் இழுபறியாகி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் நிலைக்குப் போய் விட்டது. அந்த அளவுக்கு மிகப் பெரிய இழுபறியாகி விட்டது.

    இதையடுத்து சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்கு காங்கிரஸின் ஆதரவையும் கோரின. காங்கிரஸ் கட்சியும் நீண்ட இழுபறிக்குப் பிறகு அதற்கு சம்மதம் சொன்னது. ஆனாலும் காங்கிரஸுக்கு இதில் முழுமனது இல்லைதான்.

    மகாராஷ்டிரத்தில் மீண்டும் மீண்டும் திடீர் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸில் பிளவுமகாராஷ்டிரத்தில் மீண்டும் மீண்டும் திடீர் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸில் பிளவு

    நேற்று இரவு வரை பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருந்தது. நேற்று இரவுதான் அடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே என்று சரத் பவாரும் அறிவித்தார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென பட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்றார். துணை முதல்வராக யாரும் எதிர்பாராத வகையில் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவார் பதவியேற்றார்.

    இந்த திருப்பங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. விடிந்தால் உத்தவ் தாக்கரே முதல்வர் என்ற எண்ணத்தில்தான் அனைவருமே நேற்று தூங்க போனார்கள். ஆனால் விடிந்து வந்து பார்த்தால் பட்னவீஸ் முதல்வராகியிருக்கிறார். அஜீத் பவார் துணை முதல்வராகியிருக்கிறார். இந்த பதவியேற்பு விழா எப்போது திட்டமிடப்பட்டது. என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.

    பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மிக மிக ரகசியமாக நடந்துள்ளன. ஊடகங்கள் கூட இதில் சுதாரிப்பில்லாமல் ஏமாந்து போய் விட்டன. அந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் இந்த பதவியேற்பு விழா நடந்தேறியுள்ளது. எப்படியோ பெரும் இழுபறி நீங்கியதில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மகாராஷ்டிராவில் குழப்பம் முடிவுக்கு வந்ததே என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்

    English summary
    maharashtra govt: Devendra Fadnavis back as cm in Maharashtra: The Governor's House was kept secret
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X