மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சஸ்பென்ஸ் ஓய்ந்தது.. முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத்தர காங்.. என்.சி.பி. சம்மதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க முடிவு ? | NCP-Congress Concede CM Post to Shiv Sena.

    மும்பை: சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தர காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்து சஸ்பெண்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதால் மூன்று கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி அரசு, உண்மையில் சிவசேனா தலைமையில் இருக்கும் என்பது இப்போது தெளிவாகி உள்ளது.

    என்.சி.பி மூத்த தலைவர் நவாப் மாலிக் இன்று கூறுகையல் "சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான பிளவு முதல்வர் பதவிக்கு மேல் இருந்தது. எனவே நாங்கள் முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை. முதல்வர் சிவசேனாவிலிருந்து வருவார்" என்று கூறினார்.

    சுயமரியாதை முக்கியம்

    சுயமரியாதை முக்கியம்

    இது குறித்து நவாப் மாலிக் மேலும் கூறுகையில் சிவசேனா கட்சியில் இருந்து முதல்வர் வருவார் என்று கூறுவதற்கு காரணமாக அவர்கள் ஏற்கனவே இருந்த கூட்டணியை விட்டு வெளியேவந்துள்ளார்கள். எனவே அவர்களின் சுயமரியாதையை உறுதி செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு. காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்குமா அல்லது வெளியில் ஆதரவை வழங்குவதா என்பது விரைவில் முடிவு செய்யும் என்றார்.

    சிவசேனா தெரிவிக்கவில்லை

    சிவசேனா தெரிவிக்கவில்லை

    இதனிடையே சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பாரா அல்லது கட்சி வேறொருவரை இந்த பதவிக்கு பரிந்துரைப்பாரா என்பது குறித்து சிவசேனா இதுவரை எந்ததகவலையும் தெரிவிக்கவில்லை.

    யாருக்கு வாய்ப்பு

    யாருக்கு வாய்ப்பு

    ஒருவேளை உத்தவ் தாக்கரே முதல்வராக விரும்பாவிட்டால் சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சிவசேனா கூட்டணி ஆட்சி

    இதனிடையே நாளை என்சிபி, காங்கிரஸ், சிவசேனா தலைவர்கள் ஒன்று சேர்ந்து நாளை மதியம் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளன. இதனிடையே முதல்வர் பதவியை யாராவது கோரினால் அதை பற்றி சிந்திப்போம் என்று மட்டும் சரத்பவார் கூறினார்.

    English summary
    NCP-Congress Concede CM Post to Shiv Sena. Sena legislature party leader Eknath Shinde is said to be another contender if Uddhav decides to stay out of the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X