மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அங்கு தற்போது சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது. செவ்வாய் கிழமைக்குள் அங்கு ஆட்சி அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இலங்கை அதிபர் தேர்தல்.. முன்னிலைக்கு வந்தார் கோத்தபய ராஜபக்சே.. சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவுஇலங்கை அதிபர் தேர்தல்.. முன்னிலைக்கு வந்தார் கோத்தபய ராஜபக்சே.. சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவு

என்ன புகார்

என்ன புகார்

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்ததற்கு சிவசேனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று சிவசேனா கூறுகிறது. இதன் மூலம் தங்கள் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று சிவசேனா கூறி வருகிறது.

பொறுப்பு ஆசிரியர்

பொறுப்பு ஆசிரியர்

சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாமனா பத்திரிக்கை முழுக்க இன்று பாஜகவை விமர்சனம் செய்துதான் கட்டுரைகள் வந்துள்ளது. பாஜகவில் எல்லோரும் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள். சிவசேனா இன்னும் 25 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. இதற்கான எதிர்க்கட்சிகள் பக்கத்தில் லோக்சபாவில் கடைசி மூன்று வரிசையில் சிவசேனாவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிவசேனா எம்பிக்கள் பாஜகவிற்கு பின் பக்கம் அமர்ந்து இருந்தனர்.

மொத்தமாக வெளியேறிவிட்டது

மொத்தமாக வெளியேறிவிட்டது

இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த சிவசேனா எம்பியும் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் தற்போது மொத்தமாக சிவசேனா மற்றும் பாஜக உறவு முறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Maharashtra Govt: Shiv Sena to sit in an opposite row in Lok Sabha after their break up with NDA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X