மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 லட்டு சாப்பிட ஆசையா!! பாஜக அலுவலகத்தில் இப்போதே கொண்டாட்டம் துவங்கியது.. தொண்டர்கள் உற்சாகம்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதை அடுத்து பாஜக அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அதிக கவனத்திற்கு உள்ளானது.

2வது முறையும் வெற்றிக்கொடி.. நாக்பூர் தெற்கு தொகுதியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலை2வது முறையும் வெற்றிக்கொடி.. நாக்பூர் தெற்கு தொகுதியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலை

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில் மகாராஷ்டிரா பாஜக அலுவலகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போதே அங்கு பாஜக அலுவலகம் அலங்காரம் செய்யப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.

பாஜக முடிவுகள்

பாஜக முடிவுகள்

அதேபோல் முடிவுகள் வெளியான பின் வெடிப்பதற்கான வெடிகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் கூடி உள்ளனர். ஹரியாணாவிலும் பாஜக அலுவலகம் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

ஹரியானா எப்படி

ஹரியானா எப்படி

அதேபோல் ஹரியானா, மஹாராஷ்டிரா அலுவலகங்களில் தற்போது லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்தவுடன், மக்களுக்கும், தொண்டர்களுக்கும் கொடுப்பதற்காக லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் மோசம்

காங்கிரஸ் மோசம்

இன்னொரு பக்கம் காங்கிரஸ் அலுவலகம் இரண்டு மாநிலத்திலும் பொலிவிழந்து காணப்படுகிறது. ஹரியானாவில் சில தொண்டர்கள் காணப்படுகிறார்கள். ஆனால் மகாராஷ்டிரா அலுவலகம் கூட்டம் குறைவாக பொழிவின்றி காணப்படுகிறது.

English summary
Maharashtra, Haryana election results: BJPians started celebrating already
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X