மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தவ் தாக்கரே விடாமுயற்சியுடன் பணியாற்றுவார் என நம்புகிறேன்.. பிரதமர் மோடி வாழ்த்து!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உத்தவ் தாக்கரே விடாமுயற்சியுடன் பணியாற்றுவார் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

    மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உத்தவ் தாக்கரே விடாமுயற்சியுடன் பணியாற்றுவார் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

    சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்று உள்ளார். இதற்காக பெரிய அளவில் விழா நடந்தது. மும்பை சிவாஜி பார்க்கில் பதவி ஏற்பு விழா நடந்தது. அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

    Maharashtra: Hope Uddhav ji will work diligently for the state wishes PM Modi

    மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி ஏற்று இருக்கும் உத்தவ் தாக்கரேவிற்கு என்னுடைய வாழ்த்துகள். மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர் விடாமுயற்சியுடன் பணியாற்றுவார் என்று நம்புகிறேன் என்று மோடி டிவிட் செய்துள்ளார்.

    முன்னதாக முதல்வராக பொறுப்பேற்கும் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பதவி ஏற்புவிழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார்.

    ஆனால் பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன் பாஜக - சிவசேனா கூட்டணி வைத்துதான் இந்த தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Maharashtra: Hope Uddhav ji will work diligently for the state wishes PM Modi in his tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X