மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவமானப்பட வேண்டாம்.. எடியூரப்பா தந்த அனுபவம்.. மகாராஷ்டிராவில் பாஜகவின் முடிவிற்கு என்ன காரணம்?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்று பாஜக எடுத்த முடிவிற்கு பின் கர்நாடக அரசியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவமும் ஒரு காரணம் என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்று பாஜக எடுத்த முடிவிற்கு பின் கர்நாடக அரசியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவமும் ஒரு காரணம் என்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையிலான சண்டை முற்றியுள்ளது. பாஜக முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தால் ஆதரவு என்று சிவசேனா கண்டிப்புடன் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.

மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. இதையடுத்து நேற்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். பாஜக தனிப்பெரும் கட்சியை என்ற காரணத்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக மறுப்பு.. ஆளுநரின் அடுத்த முடிவு என்ன? இருப்பது 3 ஆப்ஷன்கள்மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக மறுப்பு.. ஆளுநரின் அடுத்த முடிவு என்ன? இருப்பது 3 ஆப்ஷன்கள்

ஆட்சி அமைக்க முடியாது

ஆட்சி அமைக்க முடியாது

ஆனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறியுள்ளது. இன்று மாலை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கை அம்மாநில காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக சந்தித்தார்கள். எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று இவர்கள் சந்திப்பில் கூறினர்.

ஆதரவு இல்லை

ஆதரவு இல்லை

சிவசேனா ஆதரவு அளிக்கும் என்று நினைத்தோம். அவர்கள் அளிக்கவில்லை. அவர்கள் மக்கள் முடிவை மதிக்கவில்லை. அவர்கள் வேறு கட்சியுடன் ஆட்சி அமைத்தால் அமைக்கட்டும். நாங்கள் ஆட்சி அமைக்க எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று பாஜக கூறியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

பாஜகவின் இந்த முடிவிற்கு கர்நாடக மாநிலத்தில் பாஜகவிற்கு ஏற்பட்ட அனுபவமும் காரணம் என்று கூறலாம். இதேபோல்தான் கடந்த வருடம் மே மாதம் கர்நாடக சட்டபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சி என்கிற அடிப்படையில் ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

விலகினார்

விலகினார்

இதனால் தங்களுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவு இல்லையென்றாலும் எடியூரப்பா ஆட்சி அமைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தார். ஆனால் மஜத - காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே கண்ணீர்விட்டபடி பதவி விலகினார்.

ஏன் சங்கடம்

ஏன் சங்கடம்

இது பாஜகவிற்கு பெரிய அவமானமாக பார்க்கப்பட்டது. அதன்பின் ஒரு வருடம் கழித்துதான் எம்எல்ஏக்கள் பதவி விலகியதால், காங்கிரஸ் - மஜத ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பாஜகவின் எடியூரப்பா பதவி ஏற்றார். இந்த நிலையில் எடியூரப்பாவிற்கு நேர்ந்தது போல தர்மசங்கடம் நேர வேண்டாம். நம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

அதனால் ஆட்சி அமைத்து. பின் பதவி விலக வேண்டாம். இப்போதே வேண்டாம் என்று சொன்னால் மக்கள் மத்தியில் அனுதாபமாவது ஏற்படும் என்று மகாராஷ்டிரா பாஜக முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றபடியே சிவசேனா மீது பாஜக புகார்களை சரமாரியாக வீசி வருகிறது.

English summary
Maharashtra: Karnataka's dirty politics hold the key to BJP's decision not to form the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X