மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்!

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா வாக்சின் விநியோக முன்னுரிமை பட்டியலில் தங்களது பெயரையும், குடும்பத்தினர் பெயரையும் முன்னுரிமை பட்டியலில் வைக்கும்படி மகாராஷ்டிரா அரசு அதிகாரிகளுக்கு சில அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் சில ஐஏஎஸ், காவல்துறை அதிகாரிகளும் முன்னுரிமை பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கும்படி வலியுறுத்தி வருவதாக மாநகரட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நலனை உயர்த்துவதிலும் அரசியல்வாதிகள் போட்டி போட்டால் நம் நாடு எப்போதோ வல்லரசு ஆகி இருக்குமே என அவர்கள் தெரிவித்தனர்.

மக்கள் கொஞ்சம் உஷார்தான்... இந்த ஆண்டு அதிகம் தேடிய வார்த்தை... கொரோனா பெருந்தொற்று!மக்கள் கொஞ்சம் உஷார்தான்... இந்த ஆண்டு அதிகம் தேடிய வார்த்தை... கொரோனா பெருந்தொற்று!

 வெறித்தனமான ஆட்டம்

வெறித்தனமான ஆட்டம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் நமது தமிழகத்தில் குறைந்தாலும், அண்டை மாநிலமான கேரளா,நாட்டின் வர்த்தக தலைநகர் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வெறித்தனமாக ஆடி வருகிறது.

 உலக நாடுகள் போட்டி

உலக நாடுகள் போட்டி

இதன் ஆட்டத்தை நிறுத்த வாக்சின்தான் ஒரே வலி என்பதால் வாக்சின் கண்டுபிடிப்பில் இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இதற்காக மருத்துவ விஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இரவு, பகலாக பாடுபட்டு வருகின்றனர். ஆனால் மகாராஷ்டிரா மாநில அரசியல்வாதிகள் வேறு விதமாக போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யத்தான் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள் என நினைத்து விடாதீர்கள்.

 அரசியல்வாதிகள் அழுத்தம்

அரசியல்வாதிகள் அழுத்தம்

தடுப்பு மருந்து வந்ததும் அதை உடனடியாக விநியோகிக்கும் விதமாக, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் என முன்னுரிமை அடிப்படையில் பெயர்கள் பட்டியல் தயார் செய்யும்படி மகாராஷ்டிராவில் உள்ள மாவட்ட, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுளள்து. இந்த முன்னுரிமை பட்டியலில் தங்களது பெயர்கள், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் இருக்கும்படி சில அரசியல்வாதிகள் இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

 எங்களுக்கும் ஆபத்து

எங்களுக்கும் ஆபத்து

இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், விதிமுறைகளின் கீழ், அரசியல்வாதிகள்‘ முன்னணி பணியாளர்களின் பட்டியலில் வருவதில்லை. ஆனால் அவர்கள் பொது மக்களைச் சந்திப்பதில் முன் வரிசையில் இருப்பதால், அதிக ஆபத்தில் உள்ளதாகவும், தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்கும்படியும் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

 இவர்களுமா?

இவர்களுமா?

புனே உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் இதுபோல் பணியாளர்களுக்கு அரசியல்வாதிகள் சிலர் தொல்லை கொடுப்பதாக கூறப்படுகிறது. சில காவல்துறை, ஐஏஎஸ், அதிகாரிகளும் தங்களை முன்னுரிமை பட்டியலில் வைக்கும்படி தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

 மருத்துவர்கள் தெய்வம்

மருத்துவர்கள் தெய்வம்

ஆனால் இதையெல்லாம் கொஞ்சம் கூட நினைக்காமல் சில சுயநலவாத அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கொரோனா வாக்சின் பட்டியலில் தங்கள் பெயர் முன்னணியில் இருக்குமாறு கட்டாயப்படுத்துவது முகம் சுளிக்க வைத்துள்ளது. இதுக்காக போட்டி போடும் அரசியல்வாதிகள், மக்கள் நலனை உயர்த்துவதிலும் போட்டி போட்டால் நம் நாடு எப்போதோ வல்லரசு ஆகி இருக்கும் என நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரொம்பக் கேவலமா இருக்காங்களே இந்த மகாராஷ்டிர அரசியல்வாதிகள்!

English summary
Some politicians urge to put their name on Corona vaccine distribution priority list in Maharashtra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X