மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் திருப்பம்.. சரத் பவாருடன் பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு..புது கூட்டணியா?

மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு நடத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு நடத்தி உள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் நாங்கள் இணையும் போதே இந்த ஒப்பந்தத்தை செய்தோம் என்று சிவசேனா கூறி வருகிறது.

மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறது.

உத்தவ் தாக்கரே கூட ஓகே.. இவர்தான் பிரச்சனை.. தலைவலியாக மாறிய சஞ்சய் ராவத்.. பாஜக யோசனை!உத்தவ் தாக்கரே கூட ஓகே.. இவர்தான் பிரச்சனை.. தலைவலியாக மாறிய சஞ்சய் ராவத்.. பாஜக யோசனை!

இல்லை

இல்லை

இதனால் போதுமான இடங்களில் வென்றும் கூட பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் சிவசேனா உடன் கூட்டணி கிடையாது. அது எங்கள் கொள்கைக்கு முரணானது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

என்ன தெரிவித்தார்

என்ன தெரிவித்தார்

நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மக்கள் அதற்குத்தான் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நாங்கள் மதிக்கிறோம், என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால் புதிய திருப்பமாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு நடத்தி உள்ளார்.

என்ன ஆலோசனை

என்ன ஆலோசனை

இந்த சந்திப்பில் மஹாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். சிவசேனா தொடர்ந்து பிடிவாதமாக இருப்பது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என்றும் ஆலோசித்துள்ளனர்.

திருப்பம்

திருப்பம்

இதில் பாஜக தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சிவசேனா பிரச்சனை செய்வதால், தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க பாஜக முயல்வதாக செய்திகள் வந்தது. இந்த சந்திப்பு அந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது.

வேண்டாம்

வேண்டாம்

ஆனால் இந்த தகவலை சரத் பவார் மறுத்துள்ளார். அதன்படி, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. வைக்க மாட்டோம். சிவசேனாவை சமாதானம் செய்யும்படி அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவிடம் குறிப்பிட்டேன். நீங்கள்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன் என்று சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Maharashtra: Minister Ramdas Athawale meets Sharad Pawar amidst the political crisis in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X