மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

90ஸ் கிட் பேச்சை கேட்டு அசிங்கப்பட்ட சிவசேனா.. மகாராஷ்டிராவில் தனித்துவிடப்பட்டது.. இந்த நிலையா!

முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தனக்கான குழியை தானே தோண்டிக்கொண்டு இருக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Shiv Sena situation in Maharashtra | மகாராஷ்டிராவில் தனித்துவிடப்பட்டது சிவசேனா

    மும்பை: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தனக்கான குழியை தானே தோண்டிக்கொண்டு இருக்கிறது. அங்கு சிவசேனா மொத்தமாக தனித்து விடப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்தை பார்த்து வடிவேல்.. எப்படி இருந்த மனுஷன் என்று வருத்தத்துடன் கிண்டல் செய்து இருப்பார். தற்போது அந்த வசனம் கண்டிப்பாக மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு சரியாக பொருந்தும்.

    மகாராஷ்டிராவில் டான் குடும்பமாக இருந்த பால் தாக்கரே குடும்பத்திற்கு கடந்த இரண்டு நாட்கள் அவ்வளவு சரியாக செல்லவில்லை. தங்களின் தொண்டர்களிடமே விமர்சனத்தை சந்திக்கும் நிலைக்கு உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி சென்றுள்ளது.

    சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்! சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்!

    சிவசேனா எப்படி

    சிவசேனா எப்படி

    சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு பல நாட்களுக்கு முன்பே இந்த கூட்டணி முடிவாகிவிட்டது. லோக்சபா தேர்தலில் இவர்கள் சேர்ந்து போட்டியிட்டதால், சட்டசபை தேர்தலிலும் அந்த கூட்டணி தொடர்ந்தது. ஆனால் தேர்தலுக்கு பின்தான் பிரச்சனை வந்தது.

    வேண்டும்

    வேண்டும்

    சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும் வென்றது. இவர்கள் சேர்ந்து ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா திடீர் என்று முதல்வர் பதவி கேட்டது. அதிலும் தங்கள் குடும்பத்தில் இருந்து முதல்முறை எம்எல்ஏ ஆகியிருக்கும் 29 வயதே நிரம்பிய ஆதித்யா தாக்கரேவிற்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டது.

    பெரிய சண்டை

    பெரிய சண்டை

    இந்த கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்தது. அதேபோல் சிவசேனாவும் தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இவர்கள் சண்டையை தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ''ஹாயாக'' சனிக்கிழமை சாயங்காலம் நெட்பிளிக்ஸ் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருந்தது.

    மொத்தமாக உடைந்தது

    மொத்தமாக உடைந்தது

    ஆதித்யா தாக்கரேவின் முதல்வர் ஆசையால், பாஜக - சிவசேனா கூட்டணி மொத்தமாக உடைந்தது. எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறியது. இதன்பின் தேசியவாத காங்கிரஸ் உடன் இணையலாம் என்று சிவசேனா திட்டமிட்டது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தே சிவசேனா வெளியேறி, பாஜகவுடன் மொத்தமாக சண்டை போட்டது.

    பெரிய ஏமாற்றமும்

    பெரிய ஏமாற்றமும்

    ஆனால் கஷ்டப்பட்டு சிவசேனா மேலே பறந்து டேபிளை உடைத்தது எல்லாம் வேஸ்ட்டாக போய்விட்டது என்றுதான் கூற வேண்டும். ஆம், கடைசியில் சிவசேனாவிற்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆதரவு தரவில்லை. அம்மாநில ஆளுநர் பகத் சிங்கும், சிவசேனாவிற்கு ஆட்சி அமைக்க கூடுதல் நேரம் கொடுக்கவில்லை.

    தனித்து விடப்பட்டது

    தனித்து விடப்பட்டது

    இதனால் தற்போது சிவசேனா மொத்தமாக தனித்துவிடப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என்று யாருடனும் சேர முடியாத நிலைக்கு சிவசேனா சென்றுள்ளது. இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். சிவசேனா வாக்குகள் பல பாஜகவிற்கு செல்லும் என்கிறார்கள்.

    என்ன நடக்குமோ

    என்ன நடக்குமோ

    பாஜக சிவசேனாவை நண்பனாக பார்த்தது. ஆனால் இவர்கள் பிரிந்துவிட்டதால், சிவசேனா உறுப்பினர்கள் பலர் பாஜகவிற்கு செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். சிவசேனாவில் இதனால் வரும் நாட்களில் பெரிய பிளவு ஏற்படலாம்.

    ராஜ் தாக்கரேவை

    ராஜ் தாக்கரேவை

    அதேபோல் உத்தவ் தாக்கரேவை சமாளிக்க வேண்டும் என்று நவநிர்மாண் சேனாவின் ராஜ் தாக்கரேவிற்கு பாஜக ஆதரவு தர வாய்ப்புள்ளது. அந்த கட்சியை பாஜக வளர்ந்துவிட்ட முயற்சி செய்யும். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு, சிவசேனா மொத்தமாக தனக்கான குழியை தோண்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Maharashtra: No more friends in the state, Did Shiv Sena party made its graveyard for itself?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X