மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 மணிக்கு வந்த ஒரு கால்.. சோனியாவிடம் எச்சரித்த சரத் பவார்.. மகாராஷ்டிரா அரசியல் மாறிய நிமிடம்!

கடந்த திங்கள் கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்த போன் கால் ஒன்றுதான் அங்கு அரசியல் சூழ்நிலையை புரட்டிப்போட்டது என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சோனியாவிடம் எச்சரித்த சரத் பவார்.. மகாராஷ்டிரா அரசியல் மாறிய நிமிடம்!

    மும்பை: கடந்த திங்கள் கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்த போன் கால் ஒன்றுதான் அங்கு அரசியல் சூழ்நிலையை புரட்டிப்போட்டது என்கிறார்கள்.

    நேற்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்தார். நேற்று மாலை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இதற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    அங்கு ஆட்சி அமைவதற்கு உருவான வாய்ப்பை சிவசுசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளும் இழந்துள்ளது. இனி அங்கு என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    பாஜகவிடம் சேனா வைத்த டிமாண்டை கையிலெடுக்கும் என்சிபி? சபாநாயகர் பதவியை நாடும் காங்?.. இதுதான் டீல்!பாஜகவிடம் சேனா வைத்த டிமாண்டை கையிலெடுக்கும் என்சிபி? சபாநாயகர் பதவியை நாடும் காங்?.. இதுதான் டீல்!

    வாய்ப்பு

    வாய்ப்பு

    மகாராஷ்ராவில் முதலில் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைத்தார். ஆனால் பாஜக அங்கு ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. பாஜகவிற்கு பின் சிவசேனாவிற்குதான் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. திங்கள் கிழமை இரவு 7.30 மணிக்குள் ஆட்சி அமைக்கலாம் என்று சிவசேனாவிற்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கான சிவசேனா தீவிரமாக ஆலோசித்து வந்தது.

    கடைசி நொடி

    கடைசி நொடி

    சரியாக 7 மணிக்கு சிவசேனா ஆளுநர் மாளிகையை நோக்கி ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக சென்றுவிட்டது. சிவசேனாவுடன் சேருவது முதலில் காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டியது. ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் பச்சை கொடி காட்டியதால் சோனியா சிவசேனாவுடன் சேரும் முடிவை எடுத்தார்.

    தயாராக இருந்தார்

    தயாராக இருந்தார்

    சிவசேனாவிற்கு ஆதரவு தரலாம் என்று முடிவை எடுத்தார். அதோடு அவர்களுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தார். ஆனால் சரியாக அதே 7 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சோனியா காந்திக்கு போன் செய்துள்ளார்.

    தேர்தல்

    தேர்தல்

    அப்போது பேசிய சரத் பவார், சிவசேனாவுடன் சேர்வது சரியாக வரும் என்று தோன்றவில்லை. 6 மாதம் காத்திருந்து தேர்தலை சந்திக்கலாம். பாஜக - சிவசேனா தனித்தனியாக நிற்கும். அதனால் நமக்கு பலன் ஏற்படும். நாம் ஆட்சி அமைக்க முடியும். நாம் அவசர பட கூடாது.

    மொத்தமாக கொடுப்பது தவறு

    மொத்தமாக கொடுப்பது தவறு

    தேசியவாத காங்கிரசை விட சிவசேனா 2 இடங்கள்தான் அதிகமாக வென்றுள்ளது. அப்படி இருக்கும் போது சிவசேனாவிற்கு மொத்தமாக முதல்வர் பதவியை வாரி வழங்குவது சரியாக இருக்காது. அதனால் கொஞ்சம் யோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    அந்த நொடி

    அந்த நொடி

    இந்த நிமிடம்தான் மகாராஷ்டிரா அரசியலை மாற்றி இருக்கிறது. இதனால்தான் சோனியா சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்கும் முடிவை மாற்றிக்கொண்டார் என்கிறார்கள். இதனால் சிவசேனா ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதோடு தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமலுக்கு வந்துள்ளது.

    English summary
    Maharashtra: One phone call from Sharad Pawar to Sonia Changes everything in the state on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X