மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காம்பவுண்ட் சுவர் ஏறி.. பிட் பேப்பர்களை விட்டெறிந்து.. அதிர வைத்த நண்பர்கள்.. அசந்து போன அதிகாரிகள்!

பள்ளியின் சுவர் ஏறி பிட் பேப்பர்களை வீசிய வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

மும்பை: ஸ்கூல் காம்பவுண்ட் சுவரில் ஏறி.. ஜன்னலுக்குள் பிட் பேப்பர்களை வீசி.. 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் தங்கள் நண்பர்களுக்கு உதவி செய்துள்ளனர் சகாக்கள்.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது!

Recommended Video

    பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிட் கொடுத்த நண்பர்கள்

    மகாராஷ்டிர மாநிலத்தில் 10ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வு நடைபெற்று வருகிறது... தேர்வு முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் அங்கு ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இதையும் மீறி சில இடங்களில் மாணவர்கள் காப்பியடித்துள்ளனர்.

    maharashtra public exam cheating viral video

    யாவத்மால் மாவட்டம் மகாகோன் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியிலும் மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.. காலையில் தேர்வு துவங்கிய உடன் எல்லோரும் எழுத ஆரம்பித்தனர்.. அப்போது திடீரென காம்பவுண்ட் சுவரில் சில மாணவர்கள் விறுவிறுவென ஏறி நின்று கொண்டனர்.. கிட்டத்தட்ட 10 பேர் இருக்கும்.. அவர்களில் ஒருசிலரின் தோளில் ஸ்கூல் பை தொங்கி கொண்டிருந்தது.

    இவர்களின் நண்பர்கள் உள்ளே தேர்வு எழுதுகிறார்கள் போலும்.. அதற்காக பிட் பேப்பர்களை ரெடி பண்ணி எடுத்து வந்திருக்கிறார்கள்.. அவைகளை தேர்வு எழுதும் அறையின் ஜன்னல்களில் வீசினர்.. காம்பவுண்டுக்கு வெளியே இருந்து பிட் பேப்பர்களை எடுத்துதர, மற்ற மாணவர்கள் அதை வாங்கி ஜன்னலுக்குள்ளே எறிகிறார்கள்.. உள்ளே தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. இதை அந்த வழியாக பார்த்த சிலர் மாணவர்களை கண்டிக்கவில்லை.. மாறாக அதை வீடியோ எடுத்து, இணையத்திலும் பதிவிட்டுள்ளனர்.

    அந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.. அரைகுறையாக கட்டப்பட்டுள்ளதால் மாணவர்களால் எளிதாக ஏற முடிந்திருக்கிறது.. இதை பற்றி பள்ளி தேர்வு மைய அதிகாரி சொல்லும்போது, "காம்பவுண்டு சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம்.. முறைகேடு எதுவும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது" என்றார்.

    ஆனால் இப்படி பிட் தந்து உதவி செய்தவர்களில் பெற்றோரும், அந்த ஊர் மக்களுக்கும் பங்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.. துண்டு சீட்டுகளில் கேள்விகளுக்கான பதில்களை மெனக்கெட்டு உட்கார்ந்து எழுதி... அதனை காம்பவுண்ட் சுவர் ஏறி.. காப்பியடிக்க உதவி செய்த இந்த பாசமிகு நண்பர்கள்தான் இப்போது வைரலாகி வருகிறார்கள்.

    English summary
    10th std students climbing the school boundary walls and providing chits to their friends near maharashtra
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X