மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி?.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே

மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக பாஜக மற்றும் சிவசேனா இடையில் மீண்டும் கூட்டணி உருவாவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா!

    மும்பை: மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக பாஜக மற்றும் சிவசேனா இடையில் மீண்டும் கூட்டணி சேர்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இரண்டு வருடம் மட்டும் முதல்வர் பதவியை பெற்றுக்கொள்வதாக சிவசேனா இறங்கி வந்துள்ளது என்று பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.ஆட்சியை அமைப்பதற்கு உருவான வாய்ப்பை அங்கு பாஜக நழுவவிட்டது. ஆட்சி அமைக்க விருப்பமில்லை , எங்களுக்கு சிவசேனா ஆதரவு இல்லை என்று பாஜக இரண்டு முறை அறிவித்துவிட்டது.

    அதே சமயம் சிவசேனா மற்ற கட்சிகளுடன் சேர்ந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை.இந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில ஆளுநர் கொண்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.

    மீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்!மீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்!

    முடிவு இல்லை

    முடிவு இல்லை

    காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் இன்னும் தங்களது முடிவை அறிவிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்னும் சில நாட்கள் ஆலோசிக்க வேண்டும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள் .

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக பாஜக மற்றும் சிவசேனா இடையில் மீண்டும் கூட்டணி சேர்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்காக பாஜக தலைவர்கள் மற்றும் சிவசேனா எம்எல்ஏக்கள் மீண்டும் பேசி வருகிறார்கள். 5 வருடத்தில் இரண்டு வருடம் மட்டும் முதல்வர் பதவியை பெற்றுக்கொள்வதாக சிவசேனா இறங்கி வந்துள்ளது என்று பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பேட்டியில், நாங்கள் சிவசேனாவுடன் பேசி வருகிறோம். அவர்களுக்கு இரண்டு வருடம் மட்டும் முதல்வர் பதவி கொடுக்கிறோம். மூன்று வருடம் நாங்கள் ஆட்சியில் இருப்போம் என்று குறிப்பிட்டோம்.

    இறங்கி வந்தது

    இறங்கி வந்தது

    சிவசேனா கொஞ்சம் இறங்கி வந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிப்போம் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நான் அமித் ஷாவிடம் பேசுவேன். அவர் ஒப்புக்கொண்டால் முடிவு எடுப்போம்.

    விரைவில் சரியாகும்

    விரைவில் சரியாகும்

    எல்லாம் விரைவில் சரியாகிவிடும். பாஜக, சிவசேனா சேர்ந்து விரைவில் இங்கு ஆட்சி அமைக்கும். பாஜகவும் சிவசேனாவும் நட்பான கட்சிகள். எங்களுக்குள் சிறிய மனக்கசப்பு உருவாகி உள்ளது. அவ்வளவுதான், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Maharashtra Govt: Ramdas Athawale Devises gives the new formula of 3:2: Shiv Sena gives green signal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X