மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஷாந்த் மரண வழக்கு- அதெப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்? பீகார் அரசு மீது மகாராஷ்டிரா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

மும்பை: பீகாரை சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்துள்ளதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Recommended Video

    Sushant Singh case Complications • Final Details

    மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங். கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை மகாராஷ்டிரா அரசு விசாரித்து வருகிறது.

    Maharashtra reacts Bihar govt for recommending CBI probe in Sushant Singh death

    பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பீகாரில் அதிருப்தி குரல்கள் எழுப்பப்பட்டன. மகாராஷ்டிரா அரசு, உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லை என பீகாரில் ஆளும் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு குற்றம்சாட்டியது.

    இருமாநில அரசுகளும் பரஸ்பரம் புகார் கூறிவந்த நிலையில் இன்று பீகார் மாநில அரசு அதிரடியாக, சுஷாந்த்சிங் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை

    பீகார் அரசின் இந்த நடவடிக்கையானது, மகாராஷ்டிரா மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல். பாரதிய ஜனதா கட்சியின் துணையுடன் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையை பீகார் அரசு மேற்கொண்டுள்ளது என மகாராஷ்டிரா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    English summary
    Ruling NCP and Congress in Maharashtra slam Bihar govt for recommending CBI probe into death of actor Sushant Singh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X