மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது- இன்று 24,886 பேருக்கு பாதிப்பு- 393 பேர் பலி

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 24,886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,06,149 ஆக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,39,763. 4-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,51,874.

Maharashtra reports 24,886 fresh cases, total tally crosses 10 lakh mark

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 24,886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிராவில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,15,681 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த ரஷ்யாவின் கொரோனா பாதிப்புக்கு சற்று குறைவானது இது.

தமிழகத்தில் இன்று 5,519 பேருக்கு கொரோனா.. 77 பேர் மரணம்.. 6,006 பேர் டிஸ்சார்ஜ்தமிழகத்தில் இன்று 5,519 பேருக்கு கொரோனா.. 77 பேர் மரணம்.. 6,006 பேர் டிஸ்சார்ஜ்

மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 393 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இங்கு கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 28,724. ஸ்பெயின் நாட்டில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,699. இந்த எண்ணிக்கையை தொடும் நிலையில் இருக்கிறது மகாராஷ்டிரா உயிரிழப்புகள் எண்ணிக்கை.

மொத்தம் 7,15,023 பேர் மகாராஷ்டிராவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் (ஆக்டிவ் கேஸ்கள்) எண்ணிக்கை 2,71,566 ஆகும்.

English summary
The total number of Coronavirus cases in Maharashtra crosses the 10 lakh mark with 393 deaths and 24,886 fresh positive cases reported Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X