மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் மாபெரும் திருப்பம்.. முதல்வராகிறாரா சஞ்சய் ராவத்?.. சிவசேனா கட்சியினர் ஆலோசனை!

மகாராஷ்டிராவின் முதல்வர் பதவி சமயத்தில் சிவசேனாவின் மூத்த எம்பி சஞ்சய் ராவத்திற்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: மகாராஷ்டிராவின் முதல்வர் பதவி சிவசேனாவின் மூத்த எம்பி சஞ்சய் ராவத்திற்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

மகாராஷ்டிராவில் நொடிக்கு நொடி அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இன்று மாலை 4 மணிக்கு அங்கு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். சிவசேனாதான் ஐந்து வருடமும் ஆட்சி செய்ய போகிறது.

ஆனால் சிவசேனாவின் முதல்வர் யார்? யாரை அந்த கட்சி முன்னிறுத்தும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சுவாரசியமான புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்.. சஞ்சய் ராவத் அதிரடி அறிவிப்பு.. என்சிபிக்கு ஓகேவா?5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்.. சஞ்சய் ராவத் அதிரடி அறிவிப்பு.. என்சிபிக்கு ஓகேவா?

சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவின் முதல்வர் பதவி ஒருவேளை சஞ்சய் ராவத்திற்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் மூன்று கட்சிகளையும் ஒன்றாக இணைத்தது சஞ்சய் ராவத்தான். இவர்தான் இந்த கூட்டணியின் பிதாமகனாக இருந்தார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வராக வர முடியாது என்று மறுத்தால் சஞ்சய் ராவத் முதல்வராக வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்தார். அப்போதே சரத் பவாரிடம் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி குறித்து பேசி இருக்கிறார்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அதில், நான் முதல்வராக வர விரும்பவில்லை என்று உத்தவ் தாக்கரே கூறியதாக தகவல்கள் வருகிறது. நான் என் அப்பா மாதிரி. எனக்கு கட்சிதான் முக்கியம் என்று அவர் கூறியதாக தகவல் வருகிறது. அதனால் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அல்லது சஞ்சய் ராவத் முதல்வராக வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

உத்தவ் தாக்கரே இதற்கு முன் எம்எல்ஏவாக இருந்தது இல்லை. ஆதித்யா தாக்கரே புதிய எம்எல்ஏ. அதனால் சஞ்சய் ராவத் முதல்வராக வாய்ப்புள்ளது என்கிறார்கள். சஞ்சய் ராவத் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் நெருக்கமாக இருப்பதால், அவர் முதல்வராக வர அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

 ஆனால் என்ன சொன்னார்

ஆனால் என்ன சொன்னார்

சஞ்சய் ராவத்தை முதல்வராக அறிவித்துவிட்டு, உத்தவ் தாக்கரே அவரை பின்னிலிருந்து இயக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேதான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர்தான் முதல்வர் ஆவார் என்று காலையில் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Maharashtra: Sanjay Raut emerges as the front runner for CM post in Shiv Sena party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X