மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோருக்கும் ஆப்பு இருக்கு.. பழைய கோப்புகளை திரட்டும் ஈடி.. சிவசேனா கூட்டணி தலைவர்களுக்கு சிக்கல்!

சிவசேனா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் அமலாக்கத்துறை மூலம் விரைவில் விசாரிக்கப்படும்

Google Oneindia Tamil News

Recommended Video

    பழைய கோப்புகளை திரட்டும் ஈடி.. சிவசேனா கூட்டணி தலைவர்களுக்கு சிக்கல்

    மும்பை: சிவசேனா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் அமலாக்கத்துறை மூலம் விரைவில் விசாரிக்கப்படும் என்று தகவல்கள் வருகிறது.

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை பாஜக கட்சி மிகப்பெரிய தோல்வியாக பார்க்கிறது. அங்கு சிவசேனா தங்களை முதுகில் குத்திவிட்டது, மொத்தமாக ஏமாற்றிவிட்டது என்று பாஜக கருதுகிறது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அஜித் பவாரை வைத்து கேம் விளையாடிவிட்டது என்று பாஜக நினைக்கிறது.

    மகாராஷ்டிரா முதல்வராக இன்று உத்தவ் தாக்கரே பதவி ஏற்க இருக்கிறார். துணை முதல்வராக அஜித் பவார் இன்னும் சில நாட்களில் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    இந்த நிலையில் விரைவில் மத்திய பாஜக அரசு இந்த மூன்று கட்சி தலைவர்களுக்கு வரிசையாக செக் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா குறித்த பல ரகசியங்கள் பாஜகவிற்கு தெரியும். அதனால் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மூலம் வழக்குகளில் சிக்க வைக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

    அஜித் பவார்

    அஜித் பவார்

    இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மீதான ரூ70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்கில் தொடர்புடைய 9 முக்கியமான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் முடித்து வைத்துள்ளது. ஆனால் இதில் இன்னும் 22 எப்ஐஆர்கள் இருக்கிறது. இதில் அஜித் பவார் மீதான புகாரும் உள்ளது.

    அசோக் சவான்

    அசோக் சவான்

    அதனால் அவரை விரைவில் அமலாக்கத்துறை விசாரிக்கும் என்கிறார்கள். சமயத்தில் அவரை கைது செய்ய கூட வாய்ப்புகள் உள்ளது. இதெல்லாம் போக இன்னொரு பக்கம் மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் மீதான ஆதர்ஷ் வீட்டு ஊழல் வழக்கு மீதான விசாரணையை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    2010ல் இருந்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதை அமலாக்கத்துறை துரிதமாக விசாரிக்கும் என்கிறார்கள். சமயத்தில் அமலாக்கத்துறை அசோக் சவானை கைது செய்து காவலில் எடுத்து விசாரிகவும் முயலும். 2010 கார்கில் போர் ஹீரோக்களின் குடும்பத்திற்கு கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக புகார் உள்ளது.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    இதன் மீதுதான் விசாரணை சூடுபிடிக்க உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் பாஜகவிற்கு அதிக தொல்லை கொடுத்த காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார். தற்போது அதேபோல் சிவசேனா கூட்டணி தலைவர்களும் சிக்கலில் மாட்ட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Maharashtra: Sena - NCP - Congress alliance leader may face action from the Enforcement Department soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X