மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்.. சஞ்சய் ராவத் அதிரடி அறிவிப்பு.. என்சிபிக்கு ஓகேவா?

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார் என்று அந்த கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்.. சஞ்சய் ராவத் அதிரடி அறிவிப்பு

    மும்பை: மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார் என்று அந்த கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் கடந்த மூன்று வாரமாக நிலவி வந்த அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அங்கு புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி தற்போது அங்கு நடந்து வருகிறது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி கூட்டணி ஆட்சியை கொடுக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடன் அந்த கட்சி கூட்டணி வைக்கிறது. இது தொடர்பாக சிவசேனா மூத்த எம்பி சஞ்சய் ராவத் பேட்டி அளித்துள்ளார்.

    படுத்த படுக்கையாக காய் நகர்த்தியவர்.. பாஜகவின் புதிய எதிரியான சஞ்சய் ராவத்.. மும்பையின் சாணக்யா படுத்த படுக்கையாக காய் நகர்த்தியவர்.. பாஜகவின் புதிய எதிரியான சஞ்சய் ராவத்.. மும்பையின் சாணக்யா

    சிவசேனா

    சிவசேனா

    மூத்த எம்பி சஞ்சய் ராவத் தனது பேட்டியில், மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார். இரண்டரை ஆண்டுகள் சிவசேனா முதல்வர் இருப்பார் என்ற செய்தி தவறானது. முதல்வர் இடையில் மாற்றப்பட மாட்டார். நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக பேசி உள்ளோம்.

    இரண்டு நாட்கள்

    இரண்டு நாட்கள்

    சிவசேனா முதல்வர் இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படுவார். உத்தவ் தாக்கரேதான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.

    பாஜக இல்லை

    பாஜக இல்லை

    பாஜகவுடன் நாங்கள் இனியும் இணைய முடியாது. அவர்களுக்கு நாங்கள் கொடுத்த அவகாசமும் முடிந்துவிட்டது. ஆளுநரை வைத்து அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்த போதே அவர்களுடனான எங்களின் உறவு முறிந்துவிட்டது.

    மிகவும் தாமதம்

    மிகவும் தாமதம்

    பாஜக எங்களுக்கு இந்திரனின் இருக்கையை கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்கள் இப்போது எங்களுடன் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மிகவும் தாமதமாக இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தவறு செய்துவிட்டனர் என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Maharashtra: Shiv Sena will hold the CM post for whole term, No rotational CM says Sanjay Raut.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X