மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் அரசியல் முதிர்ச்சி.. எல்லோரின் பார்வையும் ஒருவர் மீதுதான்.. சரத் பவாரின் அடுத்த மூவ் என்ன?

மகாராஷ்டிராவில் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை மீண்டும் ஒருமுறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிரூபித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை மீண்டும் ஒருமுறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிரூபித்துள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனாவுடன் நடந்த மோதலால் தற்போது பாஜக அரசு தனது அமைச்சரவையை கலைத்துள்ளது.

அடுத்து என்ன? குடியரசுத் தலைவர் ஆட்சியா? முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா ஆளுநர்!அடுத்து என்ன? குடியரசுத் தலைவர் ஆட்சியா? முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா ஆளுநர்!

காங்கிரஸ் இல்லை

காங்கிரஸ் இல்லை

இங்கு சிவசேனா, பாஜகவுடன் எப்படியும் காங்கிரஸ் சேராது. அதனால் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை சீனிலேயே இல்லை. அதனால் பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்காத என்றுதான் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். பெரிய பதவிகளை கொடுக்க கூட அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். .

இல்லை

இல்லை

இதனால் தேசியவாத தலைவர் சரத் பவார் சிவசேனா அல்லது பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் எல்லோரும் பேசினார்கள். ஆனால் சரத் பவார் மிக கவனமாக யாருக்குமே ஆதரவு அளிக்காமல் தனியாக இருந்தார். நாங்கள் எதிர்கட்சியாகவே இருப்போம் என்று உறுதியாக எந்த ஆசையும் படாமல் வெளிப்படையாக கூறிவிட்டார்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

அவரின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சாணக்கியத்தனம் இரண்டும்தான் இதற்கு காரணம். சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால், கர்நாடகாவில் மஜதவிற்கு நேர்ந்தது போல ஒரு வருடத்தில் ஆட்சி கவிழந்து இருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கோபம் கொண்டு இருப்பார்கள். இரண்டு நல்லதல்ல!

என்ன தேர்தல்

என்ன தேர்தல்

மேலும் சரத் பவார் யாருடனும் இணையவில்லை. அதேபோல் சிவசேனா - பாஜக கூட்டணி கண்டிப்பாக உடையும், சிவசேனாவும் விட்டுக்கொடுக்காது, அதனால் எப்படியும் தேர்தல் வரும். அப்போது தேசியவாத காங்கிரஸ் முக்கிய கட்சியாக மாறும். அதனால் இப்போது யாருக்கும் ஆதரவு அளித்து பெயரை கெடுக்க வேண்டும், என்று சரத் பவார் உறுதியாக இருக்கிறார்.

வேகம்

வேகம்

பாஜக , சிவசேனா தலைவர்கள் வீட்டு வாசல்படி வந்து கேட்டும் கூட ஆட்சி அமைக்க சரத் பவார் ஆதரவு தரவில்லை. அதுமட்டுமின்றி, சிவசேனா ஒப்பந்தத்தை பாஜக மதிக்க வேண்டும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறி சரத் பவார் சிவசேனாவை தூண்டிவிட்டார். சீக்கிரம் ஆட்சி அமையுங்கள் என்று துரிதப்படுத்தி, இரண்டு கட்சிகளையும் யோசிக்கவிடாமல் செய்தார். இதுவும் கூட பட்னாவிஸ் பதவி விலகலுக்கு காரணம் என்கிறார்கள்.

எப்படி எதிர்காலம்

எப்படி எதிர்காலம்

பாஜக உடனான மோதல் காரணமாக எதிர்காலத்தில் சிவசேனாவின் வலிமை குறையும். இதனால் கூடுதலாக மாரத்தா வாக்குகள் தேசியவாத காங்கிரஸ் பக்கம் வரும். சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காததன் மூலம், சரத் பவார் அந்த கட்சியை பெரிய பாதாளத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறார். இது தாக்கரேவிற்கும் தெரியும்!

வேடிக்கை

வேடிக்கை

இந்த பிரச்சனையில் ஆர்எஸ்எஸ் வரை பேசியும் சிவசேனா தனது முடிவை மாற்றவில்லை. இன்னொரு தேர்தல் வந்து, அதில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் vs பாஜக vs சிவசேனா என்று மும்முனை போட்டி வந்தால் கண்டிப்பாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியே வெல்லும் என்றும் கூறுகிறார்கள். சரத் பவாரின் திட்டமும் அதுதான் என்கிறார்கள். இவரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

English summary
Maharashtra: NCP's Sharad Pawar proved he is a Chanakya once again as his Stalemate Continues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X