மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சில மணி நேரம்தான் மிச்சமிருக்கு.. சிவசேனா என்ன முடிவு எடுக்கும்? மகாராஷ்டிராவில் கடைசி நேர பரபரப்பு

மகாராஷ்டிராவில் இன்னும் 8 மணி நேரத்திற்குள் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சிவசேனா கட்சி தள்ளப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் இன்னும் 8 மணி நேரத்திற்குள் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சிவசேனா கட்சி தள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் இன்று மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார். பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கட்சி ஏற்கனவே கூறிவிட்டது.

புதிய கூட்டணி உருவாகும்

புதிய கூட்டணி உருவாகும்

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளால் சிவசேனா என்ன செய்யும், இன்று இரவிற்குள் எப்படி ஆட்சி அமைக்கும். சிவசேனாவிற்கு யார் ஆதரவு தருவார்கள், என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. இன்று மாலைக்குள் மகாராஷ்டிராவில் பல ஆலோசனை கூட்டங்கள் நடக்கும். கண்டிப்பாக புதிய கூட்டணி உருவாகும் என்றும் கூறுகிறார்கள்.

ஆப்ஷன் 1

ஆப்ஷன் 1

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் சிவசேனாவிற்கு மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. சிவசேனா நேரடியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்துவிட்டு, அவர்களுக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு ஆட்சி அமைக்கலாம். ஆனால் இதற்கு சரத் பவார் ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை.

ஆப்ஷன் 2

ஆப்ஷன் 2

அதற்கு அடுத்தபடியாக சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்யலாம். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சிவசேனாவுடன் கூட்டணி வைத்த கட்சிதான். அதனால் அவர்களுடன் சேர்வது சிவசேனாவிற்கு எளிமையான முடிவாக இருக்கும். காங்கிரஸ் பெரிதாக எந்த கோரிக்கையையும் வைக்காது.

இன்னொரு ஆப்ஷன்

இன்னொரு ஆப்ஷன்

அதேசமயம் சிவசேனா ஐந்து வருடம் நிலையாக ஆட்சி செய்ய வேண்டும் என்றால் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டும் போதாது. கர்நாடகாவில் மஜத தலைவர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது போல எப்போது வேண்டுமானாலும், சிவசேனா ஆட்சியும் கவிழலாம். அதனால் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இரண்டு கட்சியுடனும் கூட்டணி வைக்க முயற்சி செய்யும்.

முடிவு எடுப்பார்

முடிவு எடுப்பார்

அப்போதுதான் ஆட்சி கவிழாமல் நீடிக்கும். இதற்கான ஆலோசனைகளை மகாராஷ்டிராவில் மூன்று கட்சிகளும் மாறி மாறி செய்து வருகிறது. இன்னும் 8 மணி நேரம் கூட இல்லாத காரணத்தால் மகாராஷ்டிராவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Maharashtra: Shiv Sena left with three options to form the government in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X