மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்!

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த சிவசேனா முயன்று வருகிறது, இதற்காக இன்று ஆலோசனை நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா!

    மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த சிவசேனா முயன்று வருகிறது, இதற்காக இன்று ஆலோசனை நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    மகாராஷ்டிராவில் யார்தான் ஆட்சி அமைப்பார்கள், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது, எங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று பாஜக கட்சி கூறிவிட்டது. சிவசேனா கட்சி ஆதரவு தரவில்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

    அதேபோல் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கு தனி பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

    2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!

    இணைய வேண்டும்

    இணைய வேண்டும்

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைய வேண்டும் என்று சிவசேனா தீவிரமாக முயன்றது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் எந்த விதமான முடிவையும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் சிவசேனா எம்எல்ஏக்கள் கடும் கோபத்தில் பொறுமை இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    குழப்பம்

    குழப்பம்

    இதனால் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு 100 முறை பிறக்க வேண்டும் என்று சிவசேனா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஆனால் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கம் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும். அரசியல் மாற்றம் நடக்கும் என்றார்.

    கோபம் காரணம்

    கோபம் காரணம்

    தேசியவாத காங்கிரஸ் மீது இருக்கும் கோபம் காரணமாக சிவசேனா இப்படி சொன்னதாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் பாஜகவுடன் மீண்டும் இணைய சிவசேனா திட்டமிட்டு வருகிறது என்று ஏற்கனவே செய்திகள் வந்தது. அதன்பின் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயார். கதவுகளை திறக்க ரெடி என்று சிவசேனா கூறி வருகிறது.

    மீண்டும் பாஜக

    மீண்டும் பாஜக

    அதாவது சிவசேனா மீண்டும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் கண்டிப்பாக இந்த முறையும் முதல்வர் பதவியை கேட்கும். ஆனால் இந்த முறை பெரும்பாலும் சிவசேனாவிற்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதனால் இன்னும் 10 நாட்களில் அங்கு ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    தியாகம் செய்யும்

    தியாகம் செய்யும்

    இதனால் பாஜக சில தியாகங்களை செய்யும். 5 வருடத்தில் 2 வருடங்கள் பாஜக ஆட்சியை சிவசேனாவிற்கு விட்டு கொடுக்கும். பின் 3 வருடங்கள் பாஜக ஆட்சி செய்யும் என்று கூறுகிறார்கள். இன்று இரண்டு கட்சியும் பேச வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Maharashtra: Shiv Sena may go for alliance talks with BJP again due to NCP Pawar's attitude.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X