மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடைவிடாது தொடரும் ஆலோசனைகள்... இறுதியானது கூட்டணி.. நாளை உதயமாகிறது புதிய கூட்டணி ஆட்சி!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் உதயமாகும் கூட்டணி ஆட்சி!| Shiv Sena, NCP, and Congress will form the new alliance

    மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்றும் இடைவிடாத ஆலோசனைகளை நடத்தின. இந்த ஆலோசனைகள் தொடரும் என்கிற நிலையில் நாளை மூன்று கட்சிகளும் புதிய கூட்டணி ஆட்சி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன.

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியும் அங்கு இதுவரை ஆட்சி அமைக்க முடியவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் சிவசேனா 5 வருடம் முதல்வர் பதவியை கேட்டு ஆலோசனை செய்து வருகிறது.

    அங்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை பாஜக நழுவவிட்டுவிட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

    இடங்கள் எத்தனை

    இடங்கள் எத்தனை

    மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் சிவசேனாவும், பாஜகவும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.

    இன்று ஆலோசனை செய்கிறார்கள்

    இன்று ஆலோசனை செய்கிறார்கள்

    இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் ஆலோசனை செய்து வருகிறது. மும்பையில் இன்று நடக்கும் இந்த மீட்டிங் இறுதிக்கட்ட மீட்டிங்காக இருக்கும் என்கிறார்கள். இன்று நடக்கும் ஆலோசனையில் பெரும்பாலும் இறுதி முடிவு எடுக்கப்படும். மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

    என்ன அறிவிப்பு

    என்ன அறிவிப்பு

    இந்த கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டால் பெரும்பாலும் அதற்கு மகா சிவா அகாடி என்று பெயர் வைக்கப்படும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சிவசேனா கட்சிக்கு 16 அமைச்சர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சர் பதவி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சர் பதவி அளிக்கப்படும்.

    இன்றைய ஆலோசனை

    இன்றைய ஆலோசனை

    காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால், சோனியா காந்தி, ஏ கே அந்தோணி, சிவசேனாவின் சஞ்சய் ராவத்,, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். மும்பையில் ஆலோசனைகள் தொடர்ந்தன. இன்றைய ஆலோசனையின் முடிவில் புதிய அரசு அமைப்பது உறுதியாகி உள்ளது. புதிய அரசு குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

    English summary
    Maharashtra: Shiv Sena, NCP, and Congress will form the new alliance today and stake claim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X