மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓகே சொன்ன மாநில நிர்வாகிகள்.. ரிஸ்க் வேண்டாம்.. எச்சரிக்கும் தேசிய நிர்வாகிகள்.. குழப்பத்தில் சோனியா

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sources says that Uddhav Thackeray will be CM of Maharastra

    மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

    பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கட்சி ஏற்கனவே கூறிவிட்டது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

    சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் இன்று மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார். சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொறுமையாக இருங்கள்.. நேரம் வரும்.. திடீரென மகாராஷ்டிராவை விட்டுக்கொடுத்த பாஜக.. என்ன பின்னணி?பொறுமையாக இருங்கள்.. நேரம் வரும்.. திடீரென மகாராஷ்டிராவை விட்டுக்கொடுத்த பாஜக.. என்ன பின்னணி?

    சிவசேனா

    சிவசேனா

    இந்த நிலையில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஓகே என்று சொல்லி இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் உள்ள அசோக் சவான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிவசேனா கூட்டணி நல்லதுதான். வலுவாக இருக்கும் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

    தேசிய அளவில்

    தேசிய அளவில்

    ஆனால் தேசிய அளவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், அப்படி செய்வது சரியாகாது என்று கண்டிப்புடன் மறுத்துள்ளனர். இப்போது சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் அது உதவாது. எதிர்காலத்தில் நமக்கான வாக்கு வங்கி குறைந்துவிடும்.

    தேசிய அளவில் என்ன நடந்தது?

    தேசிய அளவில் என்ன நடந்தது?

    கர்நாடகாவில் நடந்தது போலதான் மீண்டும் நடக்கும். அங்கு மஜத உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து அமைத்த ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. இப்போதுதான் மகாராஷ்டிராவில் நாம் வளர்ந்து வருகிறோம். அதை கெடுத்துவிட வேண்டாம் என்று தேசிய நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளார். என்ன செய்வது, மாநில நிர்வாகிகள் சொல்வதை செய்வதா, தேசிய நிர்வாகிகள் சொல்வதை செய்வதா என்று சோனியா குழப்பத்தில் உள்ளார். இன்று மாலைக்குள் அந்த கட்சி முக்கிய முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Maharashtra: Congress leader Sonia Gandhi in a confused state on the alliance with Shiv Sena.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X