மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடனே வாங்க, பேசலாம்.. இரவோடு இரவாக சரத் பவாரை சந்தித்த உத்தவ் தாக்கரே.. 45 நிமிடம் நடந்த மீட்டிங்!

நேற்று மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து இரவோடு இரவாக ஆலோசனை நடத்தினார்.

Google Oneindia Tamil News

மும்பை: நேற்று மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து இரவோடு இரவாக ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு ஆட்சி அமைக்கும்.இந்த கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் பெரும்பாலும் அதற்கு மகா சிவா அகாடி என்று பெயர் வைக்கப்படும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு சிவசேனா கட்சிக்கு 16 அமைச்சர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சர் பதவி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சர் பதவி அளிக்கப்படும். சிவசேனா கட்சிக்கு இரண்டரை ஆண்டும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இரண்டரை ஆண்டும் முதல்வர் பதவி அளிக்கப்படும்.

இன்று கடைசி மீட்டிங்.. இறுதியாகிறது கூட்டணி.. மகாராஷ்டிராவில் உதயமாகும் புதிய கூட்டணி ஆட்சி!இன்று கடைசி மீட்டிங்.. இறுதியாகிறது கூட்டணி.. மகாராஷ்டிராவில் உதயமாகும் புதிய கூட்டணி ஆட்சி!

சரத் பவார் ஆட்சி

சரத் பவார் ஆட்சி

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்று சரத் பவார் டெல்லியில் ஆலோசனை நடத்தி வந்தார். அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார் . சிவசேனா உடன் சேர்வது சரியாக இருக்குமா என்று ஆலோசனை நடத்தி வந்தார்.

என்ன அறிவுரை

என்ன அறிவுரை

இதில் சோனியா காந்தி பல முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதன்பின் சிவசேனா உடன் கூட்டணி வைக்கலாம் என்று முடிவாகி இருக்கிறது. இதனால் நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பி மும்பைக்கு வந்தார் சரத் பவார்.

நடு இரவு

நடு இரவு

நேற்று மும்பைக்கு வந்தவுடன் நடு இரவில் சரத் பவார் சிவசேனா தலைவர்களை அழைத்தார். சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோரை சந்தித்து பேசினார். இரவு 11 மணிக்கு நடந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.

என்ன கூறினார்

என்ன கூறினார்

இதில் பாஜகவுடன் சிவசேனா அடுத்த ஐந்து வருடத்திற்கு உறவே வைக்க கூடாது. மொத்தமாக பாஜகவை மறக்க வேண்டும். கூட்டணியை மதிக்க வேண்டும் என்பது தொடங்கி மதசார்பற்ற தன்மை வரை பல விஷயங்களை ஆலோசனை செய்து இருக்கிறார்கள். அதன்பின் கூட்டணியை இறுதி செய்துள்ளனர்.

முதல்வர் பதவி

முதல்வர் பதவி

இதில் யார் முதல்வர் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி உள்ளனர். சிவசேனா கட்சிக்கு சோனியா காந்தி கொடுத்த சில மெசேஜ்களை சரத் பவார் தெரிவித்து இருக்கிறார். இதன்பின் இன்று மீண்டும் மீட்டிங் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

English summary
Maharashtra: Uddhav Thackeray and his son Aaditya Thackeray met Sharad Pawar yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X