மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்கு தவறு நிகழ்ந்தது? அஜித் பவாரை நம்பியது ஏன்? கடும் கோபம்.. கேள்வி கேட்கும் அமித் ஷா!

மகாராஷ்டிராவில் பாஜக சறுக்கியது எங்கே என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மாநில கட்சி தலைவர்களிடம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு! |The number of BJP ruling states is steadily decreasing.

    மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக சறுக்கியது எங்கே என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மாநில கட்சி தலைவர்களிடம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளார்.

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அதிர்ச்சி என்பதை விட பாஜக இதனால் அங்கு தனக்கு இருந்த பெயரை இழந்துள்ளது. மகாராஷ்டிராவின் முதல்வர் பதவியில் இருந்து நேற்று தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகினார்.

    இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்துத்துவா, சாவர்க்கருக்கு பாரத ரத்னா.... சிவசேனா- காங். - என்சிபி புதிய அரசு முன் சவால்கள்! இந்துத்துவா, சாவர்க்கருக்கு பாரத ரத்னா.... சிவசேனா- காங். - என்சிபி புதிய அரசு முன் சவால்கள்!

    ஆட்சி

    ஆட்சி

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்தது தொடர்பாக நேற்றே உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரதமர் மோடியும் தீவிரமாக ஆலோசனை செய்தனர். நேற்று இவர்களின் ஆலோசனைக்கு பின்தான் பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று முடிவு செய்தார். இவர்கள்தான் இந்த இறுதி முடிவை எடுத்தனர்.

    மீண்டும் ஆலோசனை

    மீண்டும் ஆலோசனை

    இதையடுத்து இன்று அல்லது நாளை இவர்கள் மீண்டும் ஒன்றாக ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா பாஜக தலைவர்களும், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

    என்ன கேள்விகள்

    என்ன கேள்விகள்

    இதில் அமித் ஷா பின் வரும் கேள்விகளை மகாராஷ்டிரா பாஜகவினரிடம் கேட்க உள்ளார் என்கிறார்கள். அதன்படி அஜித் பவாரை நம்பி அவசரமாக ஆட்சி அமைத்தது ஏன்? சிவசேனா உடன் மொத்தமாக உறவு துண்டிக்கப்பட்டது எப்படி ? இதில் சரத் பவாரின் அரசியல் காய் நகர்த்தல்கள் என்னென்ன. சோனியா காந்தி கொடுத்த ஐடியாக்கள் என்ன என்று நிறைய விஷயங்களை பேச உள்ளனர்.

    பாஜக தலைகள்

    பாஜக தலைகள்

    சில பாஜக எம்எல்ஏக்களும் சிவசேனா உடன் தேர்தலுக்கு பின் நெருக்கமாக இருந்துள்ளனர். இது தொடர்பாகவும் இவர்கள் ஆலோசனை செய்ய இருக்கிறார்களாம். மகாராஷ்டிராவில் பாஜகவின் பெயர் கெட்டதில் அமித் ஷா கடும் கோபத்தில் இருக்கிறார். அதனால் அவர் கடுமையான கேள்விகளை எழுப்புவார்.

    இரவோடு இரவாக நடந்த மீட்டிங்

    இரவோடு இரவாக நடந்த மீட்டிங்

    இதனால் அமித் ஷாவிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று இரவே மகாராஷ்டிரா பாஜக ஆலோசனை நடத்தியது. ஆம் நேற்று இரவு 10 மணிக்கு பட்னாவிஸ் தலைமையில் அவசரமாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அமித் ஷாவிடம் என்ன மாதிரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆலோசனை செய்துள்ளனர்.

    English summary
    Maharashtra: What did go wrong? Amit Shah to ask state BJPians in the internal meet soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X