மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் எல்லாம் ஓகே.. ஆனால் இந்த புதிருக்கு மட்டுமே விடை தெரியலையே.. என்ன நடக்குமோ!

மகாராஷ்டிராவின் துணை முதல்வராக யார் பதவி ஏற்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிரா சொல்லும் பாடம் இதுதான்!| Sharad Pawar became iconic in Maharastra

    மும்பை: மகாராஷ்டிராவின் துணை முதல்வராக யார் பதவி ஏற்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி யாரை துணை முதல்வராக அறிவிக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணையும் மகா விகாஸ் ஆகாதி கூட்டணியின் தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டார். இவர் இன்று மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    இதற்காக மும்பையில் பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாடு முழுக்க பல மாநில கட்சி தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    சுவிட்ச் ஆப் மோடில் அஜித் பவாரின் செல்போன்.. என்சிபி தகவல்.. அப்போ மீண்டும் மொதல்ல இருந்தா?சுவிட்ச் ஆப் மோடில் அஜித் பவாரின் செல்போன்.. என்சிபி தகவல்.. அப்போ மீண்டும் மொதல்ல இருந்தா?

    எப்படி பிரிக்கிறார்கள்

    எப்படி பிரிக்கிறார்கள்

    இந்த மகா விகாஸ் ஆகாதி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சரவை இடங்கள் கிடைக்க உள்ளது. அதேபோல் சிவசேனா கட்சிக்கு 15 அமைச்சரவை இடங்கள் கிடைக்க உள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இதில் 15 அமைச்சர்கள் இன்று முதல் கட்டமாக பதவி ஏற்க உள்ளனர்.

    என்ன பதவி

    என்ன பதவி

    அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சட்டசபை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளது. ஆனால் யாருக்கு
    சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. சிவசேனா முதல்வர், தேசியவாத காங்கிரசின் துணை முதல்வர், காங்கிரசின் சபாநாயகர் என்று அதிகாரம் பிரித்துக் கொள்ளப்பட உள்ளது.

    ஆனால் கேள்வி

    ஆனால் கேள்வி

    மகாராஷ்டிராவின் துணை முதல்வராக யார் பதவி ஏற்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி யாரை துணை முதல்வராக அறிவிக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது முதற்கட்டமாக அங்கு அஜித் பவார் துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அஜித் பவார் தனக்கு கட்சியில் பெரிய அளவில் மதிப்பில்லை என்று கூறிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்து பின் வெளியேறினார். அங்கு அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. இதனால் அவரை சமாதானபடுத்தும் வகையில் சிவசேனா கூட்டணியிலும் அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    என்ன ரகசியம்

    என்ன ரகசியம்

    அதே சமயம் இந்த துணை முதல்வர் குறித்த அறிவிப்பை சிவசேனா மிகவும் ரகசியமாக வைத்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு பதவி ஏற்பு விழாவிற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் வெளியாகும் என்று கூறுகிறார்கள். முக்கிய சில காரணங்களுக்காக இதை மொத்த கூட்டணியும் ரகசியமாக வைத்து இருக்கிறதாம்.

    English summary
    Maharashtra: Who will take oath as the deputy CM today in Sena - NCP - Congress alliance?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X