மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொறுமையாக இருங்கள்.. நேரம் வரும்.. திடீரென மகாராஷ்டிராவை விட்டுக்கொடுத்த பாஜக.. என்ன பின்னணி?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்காமல் பாஜக திடீரென விட்டுக்கொடுத்ததற்கு காரணம் என்ன என்று விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவை பாஜக விட்டு கொடுக்க என்ன காரணம்?

    மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்காமல் பாஜக திடீரென விட்டுக்கொடுத்ததற்கு காரணம் என்ன என்று விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா இன்று மாலை ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி நேரடி ஆதரவு அளிக்கும். காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வெளியே இருந்து ஆதரிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    அங்கு சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

    அபார வெற்றி

    அபார வெற்றி

    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி காரணமாக மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா ஆட்சி அமையும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிறகு, எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. எங்களுக்கு முதல்வர் பதவி கண்டிப்பாக வேண்டும் என்று சிவசேனா கூறிவிட்டது.

    சமாதானம் செய்ய முயற்சி

    சமாதானம் செய்ய முயற்சி

    சிவசேனாவை சமாதானம் செய்ய பாஜக பலமுறை முயன்றது. ஆனால் பாஜகவின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. சிவசேனா தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருந்துவிட்டது. இந்த நிலையில்தான் பாஜகவும் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று கூறி பின் வாங்கியது.

    என்ன காரணம் இருக்கிறது?

    என்ன காரணம் இருக்கிறது?

    பாஜகவின் இந்த முடிவிற்கு பின் நிறைய காரணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதன்படி, இப்போது ஆட்சி அமைக்காமல் இருப்பதுதான் சரி. மக்கள் மத்தியில் இது பெரிய அனுதாபத்தை உருவாக்கும். சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட யாருடன் கூட்டணி வைத்தாலும் அது நீண்ட நாட்கள் நீடிக்காது.

    விரைவில் தேர்தல் வரும்

    விரைவில் தேர்தல் வரும்

    எப்படியும் ஒரு வருடத்திற்குள் தேர்தல் வந்துவிடும். அப்போது சிவசேனாவை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆட்சிக்காக கூட்டணி வைத்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியையும் மக்கள் ஏற்க மாட்டார்கள். அதேபோல் பாஜக மீது மக்களுக்கு அனுதாபமும் உருவாகும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    நடக்கிறது

    நடக்கிறது

    இப்போதே சமூக வலைதளங்களில் பலர் பாஜகவிற்கு ஆதரவாக அனுதாபமாக பேசி வருகிறார்கள். சிவசேனா பாஜகவை ஏமாற்றிவிட்டது. மக்களின் வாக்கிற்கு சிவசேனா மதிப்பு அளிக்கவில்லை என்று பலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

    கர்நாடகா அரசியல் வரலாறு

    கர்நாடகா அரசியல் வரலாறு

    கர்நாடகாவிலும் இதே விஷயம்தான் நிகழ்ந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. அதேபோல் அவர்கள் கூட்டணியும் எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் உடைந்தது. அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரு வருடத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பாஜக நினைக்கிறது. இதுதான் பாஜக இப்போது விட்டுக்கொடுக்க காரணம் என்கிறார்கள்.

    English summary
    Maharashtra: Why did BJP give away the state so easily?- Here are the reasons behind it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X