மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா லாபி சொன்னபடி செய்த சோனியா.. சிவசேனாவிற்கு நோ சப்போர்ட்.. காங்கிரசின் அதிரடி கேம்!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காதது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான் !

    மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காதது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முடிவிற்கு என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத அரசியல் திருப்பங்கள் எல்லாம் நடந்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அரசியல் கட்சியினரே இந்த திருப்பங்களை கண்டிப்பாக எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

    சிவசேனா, பாஜக இரண்டு கட்சிகளும் தங்களுக்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்! சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    அதனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்தாலும் கூட அங்கு ஆட்சி அமைக்க முடியாது. மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரவு தரும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ கடைசி வரை பாயிண்ட் வரட்டும், பாயிண்டு வரட்டும் என்று காத்து இருந்தார்.

    கொடுக்கவில்லை

    கொடுக்கவில்லை

    கடைசி வரை காங்கிரஸ் கட்சி சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்கவே இல்லை. இந்த நிலையில் சோனியாவின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தேசிய தலைவர்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க கூடாது, அது மிகப்பெரிய தவறான முடிவாக மாறும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அரசியல் வல்லுநர்கள் சோனியா காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடுமையான எச்சரிக்கை

    கடுமையான எச்சரிக்கை

    சிவசேனா சிறிய கட்சியாக இருந்த போதே அவர்களுடன் கூட்டணி வைத்து, காங்கிரஸ் முதல்வர்கள்தான் அவர்களை வளர்ந்துவிட்டார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மோசமாக குறைந்தது. தற்போது மீண்டும் அவர்கள் முதல்வராக அனுமதி அளித்தால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளா லாபி

    கேரளா லாபி

    காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் தென்னிந்திய தலைவர்கள்தான் அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக கேரளாவை சேர்ந்த கேசி வேணுகோபால், ஏ கே ஆண்டனி ஆகியோரின் பேச்சைதான் சோனியா அதிகமாக கேட்டு வருகிறார். இவர்கள்தான் சிவசேனா உடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தேர்தல்

    தேர்தல்

    நாம் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டாம். தேர்தலை சந்திப்போம். சிவசேனா, பாஜக பிரிந்துவிட்டது. இதனால் அவர்களின் வாக்குகள் பிரியும். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு இதனால் பலன் கிடைக்கும். நாம் தேர்தலை சந்தித்தால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறி உள்ளனர். இதை சோனியாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    வேண்டாம் என்றார்

    வேண்டாம் என்றார்

    இதனால்தான் சிவசேனாவை நேற்று காங்கிரஸ் கழற்றிவிட்டது என்று கூறுகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் இணைவதை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Maharashtra: Why no Sonia Gandhi didn't support Shiv Sena? Here is the reason behind it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X