• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஐசிஎம்ஆர் அனுமதி லேட்.. போலீஸ் அடிக்கிறார்கள்.. கொரோனா டெஸ்ட் செய்யும் தனியார் லேப்கள் குமுறல்

|

மும்பை: இந்தியா முழுக்க கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தனியார் ஆய்வகங்களும், இந்த பரிசோதனைகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. 22 ஆய்வகங்களுக்கு இதுபோல அனுமதி வழங்கப்படுவதாகவும், அதிகபட்சமாக ரூ.4500 கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

  ஏன்... எதற்கு... எப்படி? சட்டம் பேசுன தம்பிக்கு போலீஸ் தந்த பதில்- வைரல் வீடியோ

  ஆனால், நடைமுறையில், இன்னும் பல லேப்களுக்கு, ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது. இதுகுறித்து, சில லேப் நிர்வாகிகள் ஊடகங்களிடம் பேசியுள்ளனர். அது பற்றிய ஒரு தொகுப்பு:

  எஸ்.ஆர்.எல் மற்றும் டாக்டர் பாட்கே லேப்ஸின் தலைவர் டாக்டர் அஜய் பாட்கே இதுகுறித்து கூறியதை பாருங்கள்: மும்பை மாநகராட்சி, இந்த டெஸ்ட்களை செய்யச் சொல்கிறது, ஆனால் அரசு (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) இன்னும் எங்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கவில்லை.

  இந்தியாவில் ஒரே முதல்வர்.. நேரடியாக சாலைக்கே வந்தே மமதா.. கொரோனா நேரத்திலும் துணிச்சல் - வீடியோ!

  பரிசீலனை

  பரிசீலனை

  எஸ்.ஆர்.எல் கோரேகானுக்கு (வடமேற்கு மும்பை) அனுமதி அளித்துள்ள நிலையில், எங்கள் பிற ஆய்வகங்களுக்கான விரைவில் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஏராளமான மின்னஞ்சல்களை கோவிட் -19 சோதனைகளை நடத்த அனுமதி கோரி அனுப்பியுள்ளோம். எல்லா கோரிக்கைகளையும் விரைவாகப் பரிசீலிப்பது அவர்களுக்கு கடினம் என்று நினைக்கிறேன்.

  ஐசிஎம்ஆர்

  ஐசிஎம்ஆர்

  டெல்லியின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.

  இப்போது எங்களால் ஆய்வை துவங்க முடியாததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகரிக்கப்பட்ட வாரியம் (NABL) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு மட்டும், அனுமதி வழங்குகிறது. ஏற்கனவே, நாங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம்தான் என்றபோதிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து, அதிகாரப்பூர்வ உத்தரவு வந்தால்தான், நாங்கள், ஆய்வுப் பணிகளை துவங்க முடியும்.

  ஊழியர்கள் வர முடியவில்லை

  ஊழியர்கள் வர முடியவில்லை

  கோரேகான் மற்றும் குர்கான் ஆகியவற்றிலுள்ள எஸ்எல்ஆர் லேப்களுக்கு மட்டுமே இந்த ஆய்வுகளை துவங்க அனுமதி கிடைத்துள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெப்சைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எங்களின் பிற பரிசோதனை மையங்களுக்கு, இன்னும் அனுமதி தராமல் காலம் தாழ்ந்து வருகிறது. பாட்கே லேப்ஸில் பல சேகரிப்பு மையங்களும் சுமார் 27 ஆய்வகங்களும் உள்ளன. வீட்டுக்கே சென்று, மாதிரிகளை சேகரிக்க ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்துகிறது. நாங்கள் வீட்டுக்கு சென்று, சேகரிப்பைச் செய்யலாம், ஆனால் ஒரே பிரச்சினை இப்போது மகாராஷ்டிரா லாக்டவுன் நிலையில் உள்ளது. எனவே, பாதி ஊழியர்கள் ஆய்வகங்களுக்கு வரவில்லை. வருபவர்கள் இயந்திரங்களை இயக்க மட்டுமே பயன்படுகிறார்கள்.

  சேகரிப்பு

  சேகரிப்பு

  வீட்டு சேகரிப்பைச் செய்யக்கூடிய நபர்கள் அடங்கிய தனி குழு எங்களிடம் உள்ளது. நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்து, வீடுகளுக்கு அனுப்புகிறோம். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண கருவிகள் மற்றும் N95 முகமூடிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ஐ.சி.எம்.ஆர் அனுமதி கிடைத்ததும் இந்தியாவில் உள்ள உங்கள் அனைத்து மையங்களிலும் ஒரு நாளைக்கு எத்தனை சோதனைகளைச் செய்ய முடியும்? என்ற கேள்விக்கு, எல்லா மையங்களும் இதைச் செய்ய முடியாது, ஏனெனில் இது ஒரு மூலக்கூறு சோதனை. ஐ.சி.எம்.ஆரின் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி முக்கிய மையங்களில் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

  புதிய சாதனம்

  புதிய சாதனம்

  அடுத்த மாதத்திற்குள் பாயிண்ட்-ஆஃப்-கேர் சோதனை சாதனங்கள் சந்தைக்கு வரும் என்று கருதுகிறோம். அந்த சாதனங்களை கொண்டு, பல மையங்களில் சோதனைகள் செய்யலாம். நீங்கள் மாதிரியை எடுத்துக் கொள்ளலாம், பிறகு உங்களுக்கு முழு அளவு ஆய்வக அமைப்பு தேவையில்லை. இது ஒரு சிறிய பெட்டி போன்ற அந்த மிஷின் போதும். அதில் நீங்கள் தொண்டை அல்லது மூக்கு சளியை வைத்து, அதை நேரடியாக இயந்திரத்தில் ஏற்றினால் ரிசல்ட் கிடைக்கும். இந்த மிஷின்கள் விரைவில் இந்தியாவுக்கு வரும். எங்களுக்கு எஃப்.டி.ஏ ஒப்புதல்கள் கிடைத்துள்ளன. அது வந்தவுடன், உலகெங்கிலும் உள்ள விநியோகத்தைப் பொறுத்து, அவர்கள் அதை இந்தியாவுக்கு அனுப்புவார்கள். தற்போது, ​​ஐ.டி.எம்.ஆர் இரண்டு இந்திய சப்ளையர்களான ஐடோனா மற்றும் மை லேப்ஸுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. மூன்று எஸ்ஆர்எல் ஆய்வகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு சுமார் 800 சோதனைகளைச் செய்ய முடியும்.

  பற்றாக்குறை

  பற்றாக்குறை

  மாதிரிகளை கொண்டு வருவதுதான் இப்போது மிகப்பெரிய சவால். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில், பெரும் பற்றாக்குறை உள்ளது. இந்த கருவிகளுக்கும் விலை நிர்ணயம் இருக்க வேண்டும், ஏனெனில் சில விற்பனையாளர்கள் அதற்காக அதிக விலைகளை எங்களிடம் வசூலிக்கிறார்கள். சேகரித்த மாதிரிகளை அகற்றுவது மிகவும் விஞ்ஞான முறையில் மேற்கொள்ளப்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அதுவும் முக்கியம். எங்கள் ஊழியர்களை மீண்டும் பணியில் ஈடுபட வைக்க பேருந்துகளை ஏற்பாடுகள் செய்துள்ளோம். நாங்கள், அனைத்து ஒப்புதல்களையும் பெற்றவுடன் நாங்கள் எங்கள் ஊழியர்களை எங்கள் அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும், மாதிரிகள் சேகரிப்பதற்கும் சில ஏற்பாடுகளைச் செய்ய, உதவ மாநில அரசு மற்றும் நகர காவல்துறையினருடன் பேசுவோம். இவ்வாறு தெரிவித்தார்.

  காவல்துறை அடிக்கிறது

  காவல்துறை அடிக்கிறது

  ஹிமீடியா ஆய்வகங்களின், இயக்குநர், டாக்டர் அஜய் வர்கே இந்த சிக்கல் பற்றி கூறியதை பாருங்கள்: பிரச்சனை என்னவென்றால், காவல்துறையினர் எங்கள் பணியாளர்களை அடித்துள்ளனர், எனவே அவர்களால் வேலை செய்ய முடியவில்லை. நாங்கள் அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்கிறோம், எங்கள் பணியாளர்கள் எங்கள் லேப்களுக்கே வர முடியாதபடி காவல்துறை கெடுபிடி காட்டியுள்ளது. எனவே, நான் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று அவர்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும். எங்கள் கருவிகளுக்கு அமெரிக்க எஃப்.டி.ஏ ஒப்புதல் தேவையில்லை. நாங்கள் (கோவிட் -19) சோதனை கருவிகளை தயாரிக்க வேண்டாம், நாங்கள் ஒரு வைரஸ் பரிசோதனை கிட் தயாரிக்கிறோம், இது கோவிட் -19 சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த கிட் தயாரித்து வருகிறோம். நாங்கள் முதன்முதலில் பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய்க்கு முன்பு இந்த கிட்டை உற்பத்தி செய்தோம். 2008-2009 ஆம் ஆண்டில், முழு நாடும் எங்கள் கிட்களை சார்ந்து இருந்தது. எங்கள் கிட் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தால் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  கறார் விதிமுறைகள்

  கறார் விதிமுறைகள்

  iGenetics Diagnostics சார்பில் பேசிய டாக்டர். அருணிமா பட்டேல், நாங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகரிக்கப்பட்ட வாரியம் (NABL) அமைப்பிற்கு இடையில் சிக்கியுள்ளோம் என்று குமுறியுள்ளார். NABLக்கும் ICMR க்கும் இடையிலான பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கு, ஐ.சி.எம்.ஆர் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களை மட்டுமே கொரோனா சோதனைகளை செய்யக் கூறுகிறது. எங்கள் ஆய்வகம் அங்கீகாரம் பெற்றது. இப்போது பிரச்சினை என்னவென்றால், எங்கள் சான்றிதழ் மார்ச் 31 அன்று காலாவதியாகிறது. சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய சான்றிதழைப் பெற முடியும். எனவே சான்றிதழ் இல்லாமல், ஐ.சி.எம்.ஆர் எங்களை கோவிட் -19 சோதனை நடத்த அனுமதிக்காது என்றார். ஏப்ரல் 1 முதல், நீங்கள் கோவிட் -19 சோதனைகளை நடத்த முடியுமா? என்ற கேள்விக்கு, இருக்கலாம், நம்புகிறோம் என்று பதிலளித்துள்ளார், அருணிமா பட்டேல்.

  விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
  இன்றே பதிவு செய்யுங்கள்
  - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  As the number of patients infected with the coronavirus throughout India has increased, private laboratories have been approved by the central government to conduct these tests. It has been announced that 22 laboratories will be given such permits and a maximum of Rs.4500. But, in practical, many labels have not been approved by the Indian Medical Research Council (ICMR). This makes it difficult to diagnose patients.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more