மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசிக்குதுன்னு சொன்னான்.. என் மடியிலேயே உயிர் போயிடுச்சு.. புலம் பெயர்ந்த தொழிலாளியின் பரிதாபம்!

இந்த 2 நாட்களில் ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர் பலியாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

மும்பை: "பசிக்குதுன்னு குழந்தை சொன்னான்.. பால் வாங்கி தரக்கூட வழியில்லை.. என் மடியிலேயே அவன் உயிர் போயிடுச்சு" என்று ரயில் சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளின் 4 வயது குழந்தை பசியாலேயே உயிரிழந்துள்ளது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த 2நாட்களில் ரயில்களில் செல்லும் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளது நெஞ்சை பிசைந்தெடுத்து வருகிறது.

லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட முதல்நாள் தொடங்கிய கண்ணீரும், வலியும் இன்னமும் புலம்பெயர் தொழிலாளர்களை விட்ட பாடில்லை.. ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களை விரட்டி கொண்டே இருக்கிறது.. ரத்த காவுகளும், உயிர்பலிகளும் சர்வசாதாரணமாகி கொண்டு வருகின்றன.

கொளுத்தும் வெயில் பிள்ளை குட்டிகளுடன் கிலோ மீட்டர் கணக்கில் நடந்தே போகிறார்கள்.. இந்த துயர் தாங்காமல் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தாலும், அப்போதும் இவர்களில் சிலர் பரிதாப மரணத்தையே தழுவி வருவது நிலைகுலைய வைத்து வருகிறது.

17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்!17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்!

டிரெயின்கள்

டிரெயின்கள்

டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் பல ஸ்பெஷல் டிரெயின்கள் தொழிலாளர்களுக்காக விடப்படுகின்றன. அந்த ரயில் வழியில் நிறுத்தப்படும்போதெல்லாம் உணவளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.. அதன்படியே அரசும், சில சமூகசேவை அமைப்புகளும் தயாராயின.. ஆனால், அந்த உணவு வழங்குவதிலும், பெறுவதிலும் குளறுபடிகள் ஏற்பட்டு, அதன்மூலமும் உயிர்கள் பலியானது ஜீரணிக்க முடியவில்லை.

குழந்தை

குழந்தை

பிண்ட்டு ஆலமின் என்ற பீகார் தொழிலாளி, இந்த ரயிலில் சென்று கொண்டிருந்தார்.. இவரது 4 வயது குழந்தை பசியால் அழுதே இறந்துள்ளது.. இதை பற்றி ஆலமின் சொல்லும்போது, "என் குழந்தை பசிக்கு அழுதான்.. ரயில் ஓடிட்டே இருந்தது.. எங்கே, என்ன வாங்கி அவனுக்கு தருவதென்றெ தெரியவில்லை.. ஒரு ஸ்டேஷனிலும் கடைகள் இல்லை.. பால் இருந்தால்கூட வாங்கியிருப்பேன்.. காசு என்கிட்ட இருந்தது.. ஆனால் பணமிருந்தும் என்ன பிரயோஜனம், என் குழந்தையை பறிகொடுத்துட்டேனே" என்று கதறுகிறார்.

Recommended Video

    காசு இல்ல பசி இருக்கு • Kushboo வெளியிட்ட விடியோ |Bihar Migrant women
    வாரணாசி

    வாரணாசி

    அதேபோல, மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில், 2 சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.. பணிமனையில் அந்த ரயிலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தூய்மை பணியாளர்கள்தான் பிணங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.. அதை பார்த்ததும் ஷாக் ஆகி உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் வந்து சடலங்களை மீட்டுள்ளனர்.. உயிரிழந்தவர்களில் ஒருவர் மாற்று திறனாளி என்பது கொடுமையிலும் கொடுமை!!

    சிகிச்சை

    சிகிச்சை

    இன்னொரு சிறப்பு ரயிலில் சர்வேஷ்சிங் என்பவர் குடும்பத்துடன் ஊருக்கு சென்றுள்ளார்.. ரயில் ஜான்சியை கடந்து சென்று கொண்டிருந்திருக்கிறது.. அவரது ஒரு மாத குழந்தையும் ரயிலிலேயே உயிரிழந்துவிட்டது.. குழந்தைக்கு கடுமையான ஜுரம் இருந்துள்ளது.. வழியில் சாதாரண கடைகளே இல்லாதபோது ஆஸ்பத்திரி எங்கிருக்கும்? ரயில்வேதுறையின் எமர்ஜென்சி நம்பருக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார் சர்வேஷ்சிங். 2 மணி நேரத்தில் ஒரு டாக்டரும் வந்துள்ளார்.. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் குழந்தை இறந்தே விட்டது.

    தொலைதூர பயணம்

    தொலைதூர பயணம்

    புலம்பெயர்ந்து நடந்து செல்லும்போதுதான் இவர்கள் சுருண்டு விழுந்து மாள்கிறார்கள் என்றால், ரயில் கிடைத்தும் இந்த மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது.. ரயில்களை இயக்கினாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டி உள்ளது.. இது வெயில் காலம் என்பதால், அந்த சூட்டை குழந்தைகளால் தாங்க முடிவதில்லை.. எல்லாருமே தொலைதூர பயணங்களை மேற்கொள்வதால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் நடுவழியில் ரயில்களை நிறுத்தும் வசதியும் இல்லை.

    விபத்து

    விபத்து

    பல ரயில்வே ஸ்டேஷன்களில் குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறதாம்.. இதுவரை குழந்தைகள் உட்பட மொத்தமா 9 பேர் ரயில்களில் செல்லும்போதே இறந்துள்ளனர்.. அதுவும் 2 நாட்களில்... இந்த கொடுமை எல்லாம் போதாது என்று ரயில்கள் மீது வண்டிகள் மோதி விபத்து ஏற்பட்டு அதன்மூலமும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக உள்ளது.

    உயிர்கள்

    உயிர்கள்

    இதையெல்லாம் பார்த்தால் ஒன்றே ஒன்று சொல்ல தோன்றுகிறது.. பொதுத்துறைகளை விற்பனை செய்வதைகூட பிறகு பார்த்து கொள்ளலாம்.. முதலில் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உடனடி அவசியமாகிறது!!

    English summary
    migrant workers: mumbai sharmik trains death
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X