மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய குழந்தை..மின்னல் வேகத்தில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டு

Google Oneindia Tamil News

மும்பை: ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை விபத்தில் இருந்து கண நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் செயலை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெகுவாக பாராட்டினார்.

மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு- டெல்லி விவசாயிகள் பரபர புகார் கொரோனாவை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு- டெல்லி விவசாயிகள் பரபர புகார்

ரயில்வே ஊழியர்

ரயில்வே ஊழியர்

இதனால் மாநிலத்திலுள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில் மும்பையில் வாங்கனி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை ரயில்வே ஊழியர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது.

குழந்தை

குழந்தை

அங்குள்ள 2-ஆம் எண் நடைமேடையில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். தாயின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த குழந்தை ரயில் தண்டவாளத்தில் திடீரென தவறி விழுந்தது. அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

ரயில்வே பிளாட்பார்ம்

ரயில்வே பிளாட்பார்ம்

இதனால் பதறிய அப்பெண் அந்த குழந்தையை தூக்க போராடிக் கொண்டிருந்தார். ரயில் பிளாட்பார்மில் இருந்து ஒருவர் ஓடி வந்துக் கொண்டிருந்தார். ஆனால் ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் மின்னல் வேகத்தில் தண்டவாளத்தில் ஓடி வந்தார்.

குழந்தை

குழந்தை

தனது உயிரை துச்சமாக கருதி அந்த குழந்தையை தூக்கி நடைமேடையில் விட்ட ஊழியர், அவரும் மின்னல் வேகத்தில் நடைமேடையில் ஏறிவிட்டார். அவர் ஏறுவதற்கு ரயில் கடப்பதற்கும் கண்ணிமைக்கும் நொடிதான் இருந்தது. இந்த வீடியோ வைரலானது.

மயூர் ஷெல்கே

இதையடுத்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் , ஊழியர் மயூர் ஷெல்கேவை பாராட்டினார். பின்னர் ஊழியர்கள் அவருக்கு கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தனர். மின்னல் வேகத்தில் குழந்தையை காப்பாற்றிய மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

English summary
Minister Piyush Goyal praises railway employee who saves a child by putting his life on danger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X