மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்கா வந்தாச்சு.. இறங்கி குத்து இப்படி குத்து.. நீயும் கொஞ்சம் வந்து குத்து.. தெருவில் தங்கை டான்ஸ்

கொரோனாவில் இருந்து குணமாகி வரும் தாயை வரவேற்க மகள் ஆடும் நடனம் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

மும்பை: நடுத்தெருவில் கும்மாங்குத்து போட்டு டான்ஸ் ஆடும் இளம்பெண்ணின் வீடியோதான் தற்போது இணையத்தில் செம வைரலாக போய் கொண்டிருக்கிறது.. இந்த பெண் ஏன் ரோட்டில் டான்ஸ் ஆடினார் தெரியுமா?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.. இதில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிராதான்.. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை தொற்று அதிகமாக இங்குதான் இருக்கிறது.. ஊரடங்கும் அமலில்தான் உள்ளது... அதாவது நேற்றுகூட ஒரே நாளில் 9 ஆயிரத்து 18 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

mother cured from coronavirus, and daughter danced, viral video

அதனால் பலர் குணமாகி வருவதே அதிசயமாக, ஆச்சரியமாகவும் உள்ளது. அந்த வகையில், புனேவில் ஒரு பெண்ணுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது., உடனடியாக ஆஸ்பதிரியில் சேர்த்து சிகிச்சையும் தரப்பட்டது.. இறுதியில் வைரஸை வென்று அந்த பெண் பாதுகாப்பாக வீடு திரும்பினார்.

தன் அக்கா ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வருவதை அறிந்த அவரது தங்கச்சிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.. அதனால் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார்.. அங்கு தெருவில் அவரது அக்கா நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்ததும், அப்படியே ஒரு குத்தாட்டம் போட ஆரம்பித்துவிட்டார்.

மின்சார கட்டணம் குறித்து மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.. சரத்குமார் கோரிக்கைமின்சார கட்டணம் குறித்து மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.. சரத்குமார் கோரிக்கை

"சில்லர் பார்ட்டி" என்ற படத்தில் வரும் 'டாய் தை ஃபிஷ்' என்ற பெப்பி பாடல் இசைக்க, அதற்குதான் தங்கை டான்ஸ் ஆடுகிறார்.. இந்த துள்ளல் ஆட்டத்தை பொதுமக்கள் அனைவருமே ரசித்து வருகின்றனர்.. வீட்டு வாசற்படியில், குடும்பத்தினர் குணமாகி வந்த பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கின்றனர்..

mother cured from coronavirus, and daughter danced, viral video

இந்த பெண் இவ்வளவு குஷியாக டான்ஸ் ஆடுவதற்கு காரணம், குடும்பம் மொத்தமும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறதாம்.. அதில் முதலில் குணமாகி வந்தவர் அவருடைய அக்காதானாம்... குஷியில் தங்கை ஆடும் இந்த டான்ஸ்தான் வைரலாகி வருகிறது.. புனேவின் ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை பலரும் ரசித்தும் வருகின்றனர்!

English summary
mother cured from coronavirus, and daughter danced, viral video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X