மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவசேனா உடன் காங்கிரஸ் கூட்டணி.. எப்படி நடந்தது மேஜிக்.. பின்னணியில் இருந்தது கமல் நாத்

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிரா சொல்லும் பாடம் இதுதான்!| Sharad Pawar became iconic in Maharastra

    மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் மேலிடத்திற்கு நம்பிக்கை அளித்ததில், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒரு கட்டத்தில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டைக்குள்ளான போது, மூத்த சிவசேனா தலைவர் கமல்நாத்தை அழைத்து நீங்கள் தலையிட்டு முடித்து வையுங்கள் என வலியுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

    நவம்பர் 11 காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்தித்த பிறகும் கூட, சிவசேனாவுடனான கூட்டணியில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. சிவசேனாவை நம்ப காங்கிரஸ் தயாராக இல்லாமல் இருந்தது.

    கருணாநிதி முதல்வராக இறக்க கூடாது என்று நினைத்தேன்.. அதில் வெற்றியும் பெற்றேன்.. சீமான் பரபரகருணாநிதி முதல்வராக இறக்க கூடாது என்று நினைத்தேன்.. அதில் வெற்றியும் பெற்றேன்.. சீமான் பரபர

    ஜெய்ப்பூரில் எம்எல்ஏக்கள்

    ஜெய்ப்பூரில் எம்எல்ஏக்கள்

    அன்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, பிருத்விராஜ் சவான், அசோக் சவான், சுஷில் குமார் ஷிண்டே, அகமது படேல் மற்றும் பாலாசாகேப் தோரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் காத்திருந்தனர்.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    இந்த கூட்டத்துக்கு பின்னர் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, சிவசேனா உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றே தெரிவித்தார். இதன் மூலம் காங்கிரஸ் சிவசேனா கூட்டணி குறித்த பேச்சுக்கு ஏறக்குறைய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் வெளிப்படையாகவே சொன்னார்

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    இதனால் சிவசேனா எங்கும் செல்ல வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இப்படி ஒரு நிலை சிவசேனாவுக்கு வேண்டும் என்ற ரீதியில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

    ஆளுநர் இறுதி கெடு

    ஆளுநர் இறுதி கெடு

    இதற்கிடையே சிவசேனா ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்த இறுதி கெடு நவம்பர் 11 ம் தேதி 7.30 மணிக்கு நெருங்கிய நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவர் ஒருவர், மத்திய பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தை தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    விரைவில் தேர்தல்

    விரைவில் தேர்தல்

    அப்போது காங்கிரஸ் கட்சி, விரைவில் டெல்லி, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால் சித்தாந்தத்துடன் சமரசம் செய்ய விரும்பாமல் இருந்தது. அதேநேரம் மகாராஷ்டிரா கட்சித் தலைவர்கள் - முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே உட்பட - காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

    சாதித்த கமல் நாத்

    சாதித்த கமல் நாத்

    இதை உணர்ந்த கமல்நாத், காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்களிடையே நவம்பர் 18 முதல் 21 வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அத்துடன் என்சிபி தலைவர்கள் சரத் பவார் மற்றும் பிரபுல் படேல் ஆகியோருடனும் பேசியிருக்கிறார். அதன்பிறகு இறுதியாக சிவசேனாவுக்கான கூட்டணி கதவுகளைத் காங்கிரஸ் திறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்நாத் தான் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள், சிவசேனா தலைவர்கள், மற்றும் என்சிபி தலைவர்கள் சேர்த்து வைத்து கூட்டணி வைக்க முக்கிய காரணமாக மாறி இருக்கிறார்.

    English summary
    Madhya Pradesh CM Kamal Nath played key role in convincing Congress alliance with Shiv Sena in Maharashtra
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X