மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முகேஷ் அம்பானி அதிரடி.. உலக கோடீஸ்வரர்கள் எதிர்பார்க்காத மூவ்.. ஜியோவில் 13வது முறையாக மாஸ் முதலீடு

Google Oneindia Tamil News

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோவில் தற்போது 13வது முறையாக மிகப்பெரிய முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உலக பணக்காரர்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய முடிவாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு உலக நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறது. அதிலும் அமெரிக்காவில் பல கோடிகளை ஈட்டி வரும் நிறுவனங்கள் ஜியோ மீது முதலீடுகளை குவிக்க தொடங்கி உள்ளது.

அந்த வகையில் தற்போது ஜியோவில் அமெரிக்காவை சேர்ந்த குவால்காம் ஐஎன்சி (Qualcomm Inc)நிறுவனம் முதலீடு செய்துள்ளது.மொத்தம் 730 கோடி ரூபாயை அந்த நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்துள்ளது.

ராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா? ராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா?

ஜியோ குவால்காம்

ஜியோ குவால்காம்

ஜியோவில் மொத்தம் 0.15% பங்குகளை குவால்காம் ஐஎன்சி நிறுவனம் வாங்கி உள்ளது. குவால்காம் ஐஎன்சி நிறுவனம் அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வரும் நிறுவனம் ஆகும். அமெரிக்காவில் தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனமாகும். அமெரிக்காவில் இந்த நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வரும் நிலையில் அதே நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்துள்ளது.

5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

இதனால் இந்தியாவில் 5ஜியை அறிமுகப்படுத்த ஜியோ தீவிரமாக களமிறங்கி உள்ளது என்று கூறுகிறார்கள். ஜியோவின் முடிவிற்கு பின் வேறு பெரிய திட்டங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது ஜியோவில் செய்யப்படும் 13வது பெரிய முதலீடு ஆகும். ஜியோவின் 25.24% பங்குகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 118,318.45 முதலீடுகளை ஈட்டி உள்ளது.

யார் இவர்கள்

யார் இவர்கள்

குவால்காம் நிறுவனம் சான் டியாகோ, கலிபோர்னியா ஆகிய இடங்களில் தங்கள் நிறுவனங்களை அமைத்து உள்ளது. வயர்லெஸ் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறது. குவால்கம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்பம்தான் தற்போது இருக்கும் ஆண்டிராய்டு போன்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஜியோ விரைவில் ஆண்டிராய்டு போன்களை வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில் குவால்காம் அதில் முதலீடு செய்துள்ளது .

முகேஷ் அம்பானி பிளான்

முகேஷ் அம்பானி பிளான்

கடந்த சில தினங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு செய்துள்ளது. 43,574 கோடி ரூபாயை பேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு உள்ளது. மேலும் அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் பங்குகளை 5655 கோடிக்கு வாங்கியது. ஜியோவின் 1.5% பங்குகளை அந்த நிறுவனம் வாங்கியது.

வேறு நிறுவனம்

வேறு நிறுவனம்

மேலும் விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஜியோவின் பங்குகளை 11637 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தொடர் முதலீடுகள் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக மாறியுள்ளது. அதேபோல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் இரண்டு மாதத்தில் மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

Recommended Video

    அசுர வளர்ச்சி காணும் ஜியோ.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு
    பெரிய வளர்ச்சி

    பெரிய வளர்ச்சி

    முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகின் இன்னொரு பெரிய பணக்காரர் வாரன் ஃபப்பெட்டை முகேஷ் அம்பானி வீழ்த்தி உள்ளார். வாரன் ஃபப்பெட்டின் சொத்து மதிப்பு 67.9 பில்லியன் டாலராக இருக்கிறது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி 7ம் இடத்தில் உள்ளார். இவர் விரைவில் டாப் 5ம் இடத்திற்கு வருவார் என்கிறார்கள். கொரோனா காலத்தில் ஜியோ அடுத்தடுத்து முதலீடுகளை ஈர்ப்பது உலக கோடீஸ்வரர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

    English summary
    Mukesh Ambani on the floor: 13th big investment in Jio in less than two months.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X