மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் முகேஷ் அம்பானி...கோட்டை விட்ட பிரபலங்கள்!!

Google Oneindia Tamil News

மும்பை: கடனே இல்லாத இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி, இன்று வாரன் பஃப்பெட்டை முந்தி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஃபோர்ப்சின் தற்போதைய கணக்குப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 70.1 பில்லியன் டாலராகும். கூகுள் நிறுவனர்களான லேரி பேஜ், செர்ஜி பிரின் இருவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி.

இந்தியாவில் பெரிய அளவில் வர்த்தகத்தை கொண்டு இருக்கும் முகேஷ் அம்பானியின் ஜியோவில் ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் முதலீடு செய்து இருந்தது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்த Facebook நிறுவனம், அதன் மூலம் 9.99% பங்குகளை வாங்கி இருந்தது.

 கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங் கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்

உலக பணக்காரர்கள் பட்டியல்:

உலக பணக்காரர்கள் பட்டியல்:

ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்டு இருக்கும் தற்போதைய தகவலில் முகேஷ் அம்பானிதான் உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி ஏழாம் இடத்தில் இருக்கிறார்.

ஃபேஸ்புக், இன்டெல் கேபிடல், ஜெனரல் அட்லாண்டிக், அபுதாபியின் ஏடிஐஏ ஆகிய நிறுவனங்கள் ஜியோவின் பங்குகளை வாங்கிய பின்னர், ஜியோவின் ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு இரட்டிப்பானது. இந்த நிறுவனங்களிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் 15 பில்லியன் டாலர் அளவிற்கு முதவீடு குவிந்தது. பங்குகளை விற்று இன்று கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.

கடன் இல்லா ரிலையன்ஸ்:

கடன் இல்லா ரிலையன்ஸ்:

இந்த முதலீடுகளை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''மார்ச் 31, 2020ல் எங்களது நிறுவனத்தின் கடன் 161,035 கோடியாக இருந்தது. தற்போது கிடைத்து இருக்கும் முதலீடுகளை அடுத்து எங்களது நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது'' என்று அறிவித்து இருந்தது.

அடுத்த ஸ்ட்ரோக்:

அடுத்த ஸ்ட்ரோக்:

பிரிட்டனின் ஆயில் எரிவாயு நிறுவனமான பிபியும், ரிலையன்சும் இணைந்து ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நாடு முழுவதும் பெட்ரோல் பம்ப் நிலையம் அமைக்க இருப்பதாக நேற்று அறிவித்து இருந்தது. 63 வயதாகும் முகேஷ் அம்பானி இன்றும் உலக வர்த்தகத்தை கோலோச்சி வருகிறார்.

புளூம்பெர்க் தகவல்:

புளூம்பெர்க் தகவல்:

Bloomberg Billionaire Index வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலராக இருக்கிறது. வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 67.9 பில்லியன் டாலராக இருக்கிறது. வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனமும் கொரோனா வைரசுக்கு தப்பவில்லை. இந்த நிறுவனம் 50 பில்லியன் டாலர் அளவிற்கு நிகர இழப்பை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டிரஸ்ட்:

டிரஸ்ட்:

இத்துடன் சமீபத்தில் வாரன் பஃபெட்டின் பார்ச்சூன் நிறுவனம் 2.9 பில்லியன் டாலர் அளவிற்கு தனது சொத்துக்களை டிரஸ்ட்டுக்கு எழுதி வைத்தது. 2006ல் இருந்து இதுவரைக்கும் வாரன் பஃபெட் 37 பில்லியன் டாலர் அளவிற்கு தனது சொத்துக்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துள்ளார். இதனாலும், வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

Recommended Video

    Reliance might split into 3 parts: Mukesh Ambani plans
    ஜியோவின் அதிரடி வருமானம்: tamil.goodreturns.in தகவல்:

    ஜியோவின் அதிரடி வருமானம்: tamil.goodreturns.in தகவல்:

    உலகமே கொரோனா தொற்று காரணமாக வர்த்தகம் நடக்காமல் முடங்கி கிடக்கிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ரிலையன்சில் முதலீடுகள் குவியத் தொடங்கியது. மே 4 ஆம் தேதி ரூ.5,656 கோடி முதலீடு செய்த Silver Lake நிறுவனம் 1.15% பங்குகளையும், மே 8 அன்று ரூ.11,367 கோடி முதலீடு செய்து, விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளையும், மே 17 அன்று ரூ.6,598 கோடி முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34% பங்குகளையும், மே 22 அன்று ரூ.11,367 கோடி முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32% பங்குகளையும், ஜூன் 5ல் ரூ.9,093 கோடி முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85% பங்குகளையும், ஜூன் 5ல் அன்று சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ரூ.4,547 கோடி முதலீடு செய்து கூடுதலாக 0.93% பங்குகளையும் வாங்கி இருந்தன.

    ஜுன் 8ல் அன்று அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ ரூ. 5,863.50 கோடி முதலீடு செய்து, 1.16% பங்குகளை வாங்கியது. ஜூன் 13: டிபிஜி நிறுவனம் ரூ.4,546.80 கோடி முதலீடு செய்து 0.93% பங்குகளை வாங்கியது. ஜூன் 13 அன்று L catterton நிறுவனம் 10வது முறையாக 0.39 சதவீத பங்குகள் மூலம் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

    ஜுன் 8ல் அன்று அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ ரூ. 5,863.50 கோடி முதலீடு செய்து, 1.16% பங்குகளை வாங்கியது. ஜூன் 13: டிபிஜி நிறுவனம் ரூ.4,546.80 கோடி முதலீடு செய்து 0.93% பங்குகளை வாங்கியது. ஜூன் 13 அன்று L catterton நிறுவனம் 10வது முறையாக 0.39 சதவீத பங்குகள் மூலம் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

    English summary
    Mukesh Ambani overtakes Warren Buffet to become 7th richest man in the world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X