மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடும்ப சபை அமைக்க முகேஷ் அம்பானி திட்டம்.. இனி ரிலையன்ஸ்ஸின் எதிர்காலம் இதுதான்!

Google Oneindia Tamil News

மும்பை: உலகின் நான்காவது பணக்காரரான முகேஷ் அம்பானி. அடுத்தடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக குடும்பத்தின் பரந்த வணிக சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க ஒரு கூட்டு நிர்வாக கட்டமைப்பை செயல்படுத்த 'குடும்ப சபை' ஒன்றை அமைத்து வருகிறார், இது தொடர்பான விவரங்களை நேரடியாக அறிந்த இரண்டு பேர் தெரிவித்தனர்.

Recommended Video

    Reliance AGM 2020 Highlights | JIO-Google | JIO 5G | Oneindia Tamil

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை அம்பானியின் பிள்ளைகளான ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த சபை சமமான பிரதிநிதித்துவத்தை வழங்க உள்ளதாம்., பேச்சுவார்த்தைகள் தனிப்பட்டதாக இருப்பதால் பெயர்கள் குறிப்பிடப்படப்படவில்லை.

    இந்த நடவடிக்கை ரிலையன்ஸின அடுத்தடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும், அம்பானியின் மூன்று பிள்ளைகளும் இணைகிறார்கள். வழிகாட்டிகளாகவும் ஆலோசகர்களாகவும் வெளி உறுப்பினர்களும் செயல்பட வாய்ப்பு உள்ளதாம்.

    இந்தா பிடிங்க ரூ. 3743 கோடி.. மாலத்தீவு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு.. இந்தியா தாராள உதவி!இந்தா பிடிங்க ரூ. 3743 கோடி.. மாலத்தீவு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு.. இந்தியா தாராள உதவி!

    குடும்ப உறுப்பினர்கள்

    குடும்ப உறுப்பினர்கள்

    இந்த குழு தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க போகிறதாம். இந்த மன்றம் ஒவ்வொரு கிளைக்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட முறையில் பிரதிநிதித்துவத்தை வழங்க உள்ளதாம். குடும்பம் அல்லது அதன் வணிகங்களுடன் தொடர்புடைய முக்கியமான முடிவுகளை எடுக்க இந்த குழு உதவுமாம்.

    நிறுவனத்தின் எதிர்காலம்

    நிறுவனத்தின் எதிர்காலம்

    63 வயதான அம்பானி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார். குடும்ப சபையை அமைப்பதன் மூலம், இப்போது 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்து வைத்துள்ள முகேஷ் அம்பானி , குடும்பத்திற்கு தனது ஆர்ஐஎல் நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பரந்து விரிந்த பார்வை இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார். குடும்ப சபை அமைப்பதன் மூலம் அடுத்த தலைமுறை நிர்வாகத்தில் பொறுப்பேற்கும்போது மோதல்கள் ஏதேனும் இருந்தால் தீர்க்கப்படலாம் என்பதால் இந்த முடிவை முகேஷ் அம்பானி எடுத்துள்ளாராம்.

    கற்றுக்கொடுத்த பழைய பாடம்

    கற்றுக்கொடுத்த பழைய பாடம்

    முன்னதாக 1973 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நிறுவிய திருபாய் அம்பானி இறந்தபின், முகேஷ் அம்பானி தனது சகோதரருடனான போட்டியில் இருந்து சில படிப்பினைகளைப் பெற்றார். அம்பானி சகோதரர்கள் இறுதியில் தங்கள் தந்தையின் தொழில்களைப் பிரித்துக் கொண்டனர். எனவே தான் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்க குடும்பசபை அமைத்துள்ளார்.

    மூன்று நிறுவனத்துக்கும்

    மூன்று நிறுவனத்துக்கும்

    குடும்ப சபை உறுப்பினர்கள் தான் வணிகங்களில் நலன்களைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் குடும்பங்களின் கருத்தை கேட்டு பின்பற்றும். மேலும் பல்வேறு விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களிடையே ஒருங்கிணைக்க ஒரு நிர்வாக அமைப்பாகவும் செயல்படுமாம். அம்பானியின் மூன்று பிள்ளைகளும் சில்லறை, டிஜிட்டல் மற்றும் எனர்ஜி போன்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தனித்தனியாக தலைமை ஏற்பார்கள். என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவிலை .

    இஷா, ஆனந்த், ஆகாஷ்

    இஷா, ஆனந்த், ஆகாஷ்

    தற்போதைய நிலையில் 2014ம் ஆண்டு அக்டோபரில், ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநர்களாக இணைந்தனர். இளைய மகன் அனந்த், மார்ச் மாதத்தில் கூடுதல் இயக்குநராக ஜியோ பிளாட்ஃபார்ம் குழுவில் நியமிக்கப்பட்டார். ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோர் ஜியோ பிளாட்ஃபார்ம்களின் குழுவில் உள்ளனர். ஜியோ நிறுவனம் அமைத்து வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் இஷா அம்பானி உள்ளார். ஆகாஷ் மற்றும் ஆனந்த் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். , ​​ஈஷா, யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் தெற்காசிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றார்.

    English summary
    Mukesh Ambani plans to set up a family council for Reliance Industries Ltd. The council will provide equal representation to all family members, including the three Ambani siblings—Akash, Isha and Anant—who are expected to take over the reins of Reliance Industries Ltd (RIL).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X