மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பை ஆரே காலனி.. மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டம்.. 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு!

மும்பை ஆரே காலனி பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நுரையீரல் பகுதி மரங்களை வெட்ட எதிர்ப்பு... தீவிரமடையும் போராட்டம் -வீடியோ

    மும்பை: மும்பை ஆரே காலனி பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    மும்பை ஆரே காலனி பகுதி போராட்டம் தினம் தினம் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கு மரங்களை வெட்ட அரசு முடிவெடுத்துள்ளது.

    இதனால் அங்கு இருக்கும் 2700 மரங்களை மும்பை மாநகராட்சி வெட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு மக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக அங்கு பலர் போராடி வருகிறார்கள்.

    கைது

    கைது

    இந்த போராட்டம் காரணமாக மும்பையில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரபலங்கள் பலர் கைது செய்யப்பட்டனர். சிவசேனா கட்சியை சேர்ந்த சிலரும் இந்த போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டனர்.

    உச்சம்

    உச்சம்

    இவர்களின் கைதை அடுத்து மும்பையில் பல இடங்களில் போராட்டம் உச்சம் பெற்றது. பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் ஆரே காலனி பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. அதோடு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

    என்ன ஜாமீன்

    என்ன ஜாமீன்

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 29 பேருக்கும் நேற்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று 29 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் திஹார் ஜெயிலில் இருந்து நேற்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆகவே ஆரே காலனி பகுதியில் கொஞ்சம் பதற்றம் தணிந்தது. மேலும் 144 தடை உத்தரவும் நீக்கப்பட்டது.

    இன்று வழக்கு

    இன்று வழக்கு

    இந்த நிலையில் மும்பை ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனால் மீண்டும் மும்பை ஆரே காலனி பகுதியில் போராட்டம் நடக்க தொடங்கி உள்ளது. ஆகவே ஆரே காலனி பகுதியில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Mumbai Aarey Tree: 144 imposed after too many protesters gathered in the colony area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X