மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்களுக்கு இயற்கை மீது அக்கறை உள்ளது.. ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி.. அரசு மீது பாய்ச்சல்!

மும்பை ஆரே காலனி வழக்கில் உச்ச நீதிமன்றம் மும்பை மாநில பாஜக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Mumbai Aarey Tree | ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..அரசு மீது பாய்ச்சல்!-வீடியோ

    மும்பை: மும்பை ஆரே காலனி வழக்கில் உச்ச நீதிமன்றம் மும்பை மாநில பாஜக அரசிடமும் மாநகராட்சி நிர்வாகத்திடமும் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

    மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கு 27000 மரங்களை அம்மாநில அரசு வெட்டி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மும்பை ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை மரங்களை வெட்ட கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    எப்படி வழக்கு

    எப்படி வழக்கு

    இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் மும்பை மாநில பாஜக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதில், இந்த காலனி பகுதியில் மரங்களை வெட்ட கூடாது. அடுத்த விசாரணை முடிந்து, முழு உத்தரவு வரும் வரை மரங்களை வெட்ட கூடாது. இந்த பகுதி காடு என்று உறுதியாக கூறப்படவில்லை.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இது ஒரு வகையில் காடாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இப்போதைக்கு மரங்களை வெட்ட கூடாது. மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மாநில அரசு கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இதுவரை வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை என்றும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மும்பை நிலை

    மும்பை நிலை

    அதேபோல் மும்பையில் மெட்ரோ பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை, அதற்கு மாற்றாக எவ்வளவு செடிகள் நடப்பட்டது, அதில் எத்தனை வளர்ந்தது அதன் நிலை என்ன என்று தற்போது மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    பராமரிப்பு

    பராமரிப்பு

    இந்த மரங்களின் பராமரிப்பு குறித்தும், தற்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எங்கு புதிய செடிகள் நடப்படும் என்பது குறித்தும் அறிவிக்க வேண்டும். நாங்கள் இயற்கை மீது பெரிய அக்கறை கொண்டு இருக்கிறோம், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஏற்கனவே முடிந்துவிட்டது

    ஏற்கனவே முடிந்துவிட்டது

    ஆனால் இந்த பகுதியில் ஏற்கனவே 2700 க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டது. மொத்தமாக கட்டுமானத்திற்கு தேவையான மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டது. இப்போது மரம் வெட்ட தடை விதிக்கப்பட்டாலும், அது பெரியளவில் பலன் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    மிக தீவிரம்

    மிக தீவிரம்

    3 நாட்களில் மிக தீவிரமாக, துரித கதியில் செயல்பட்ட மாநில அரசு இந்த மரங்களை வெட்டி இருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பார்கள். அப்படித்தான் இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் வெற்றிபெற்று இருந்தாலும், அது நிறைவான வெற்றியாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Mumbai Aarey Tree: Supreme Court hit heavy on Maha Govt on the status of forest due to Metro.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X