மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி தெரியாதா.. தமிழக மாணவரை அவமதித்த விமான நிலைய அதிகாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக மாணவரை அவமதித்த விமான நிலைய அதிகாரி- வீடியோ

    மும்பை: இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட மாணவர் அதிகாரியின் இந்த அடாவடி செயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்டோருக்கு டிவிட்டரில் டேக் செய்து புகார் கூறியுள்ளார்.

    Mumbai Airport officials asks TN student to return to Tamil Nadu if not speak in Hindi

    மாணவரிடம் திமிராகப் பேசி அவமரியாதை செய்த அந்த அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அவரது பெயர் ஆப்ரகாம் சாமுவேல். பிஎச்டி ஆய்வு மாணவர். இன்று அதிகாலை 1 மணியளவில் நியூயார்க் செல்வதற்காக விமானத்தைப் பிடிக்க மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார் சாமுவேல்.

    அங்கு குடியுரிமைப் பிரிவில் இமிகிரேஷனுக்காக அணுகியபோது அங்கிருந்த அதிகாரி இந்தியில் பேசியுள்ளார். ஆனால் தனக்கு ஆங்கிலம், தமிழ் மட்டுமே தெரியும் என்று கூறி ஆங்கிலத்தில் பேசியுள்ளார் சாமுவேல். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த அதிகாரி இந்தியிலேயே பேசியுள்ளார். சாமுவேல் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோது இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படின்னா தமிழ்நாட்டுக்கே போயிரு என்று கூறி இமிகிரேஷன் கொடுக்க மறுத்துள்ளார்.

    இதனால் கோபமடைந்த மாணவர் சாமுவேல் குடியுரிமைப் பிரிவு உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதையடுத்து விரைந்து வந்த உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியை கேட்டபோது அவர்களிடமும் இந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டுக்குப் போகுமாறு திரும்பவும் திமிராக பேசியுள்ளார் அந்த அதிகாரி. இதையடுத்து உயர் அதிகாரிகள் சாமுவேலுக்கு வேறு அதிகாரி மூலம் இமிகிரேஷன் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    [என்ன 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!]

    சாமுவேல் உடனடியாக விமானத்தை பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் பிரச்சினை செய்யாமல், புகார் ஏதும் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஆனால் டிவிட்டரில் போட்டு அந்த அதிகாரியைக் கிழித்தெடுத்து விட்டார்.

    இதுதொடர்பாக சாமுவேல் போட்டுள்ள தொடர் டிவிட்டுகளின் தொகுப்பு


    மும்பை விமான நிலையத்தின் 33வது கவுண்டரில் இருந்த அதிகாரி எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் இமிகிரேஷன் கொடுக்க மறுத்தார். அவர் குறித்து புகார் கூறியுள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.


    நான் உடனடியாக விமானம் ஏற வேண்டியிருந்ததால் புகார் ஏதும் தரவில்லை. இல்லாவிட்டால் அங்கேயே தங்கியிருந்து அந்த அதிகாரியை ஒரு வழி செய்திருப்பேன். இவரைப் போன்ற முட்டாள்கள் எப்படி இந்திய அரசில் பணியாற்றுகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இவர் ஒரு அவமானம்.


    ஒரு இந்தியரின் அடிப்படை உரிமையான இமிகிரேஷனை தர மறுத்துள்ள அந்த அதிகாரி குறித்து குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எது அவரது வேலை என்பதை அவருக்குப் புரிய வைக்க வேண்டும்.


    நான் ஒரு இந்தியன். நான் இந்தி பேசுவதில்லை. அவ்வளவுதான். தங்களது சொந்த, அழகிய மொழியைப் பேசும் இந்தியர்களை அவமதிக்காதீர்கள்.


    நான் அவரிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினேன். தமிழில் கூட பேசவில்லை. எனக்கு இந்தி தெரியாது என்று கூறியதை குற்றமாக கருதிய அவர் அந்தப் பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத முட்டாள் என்றுதான் கூற வேண்டும். அதே அதிகாரி, ஆங்கிலத்தில் பேசிய வெளிநாட்டுக்காரரை கிளியர் செய்து என் கண் முன்பாகவே அனுப்பி வைத்தார்.


    நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அதற்கும் மேலாக தமிழன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். அதுதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால் உங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு தகுதி இல்லை.


    இந்தி தெரியாத ஒரே காரணத்திற்காக எந்த இந்தியருக்கும் இமிகிரேஷன் மறுக்கப்படக் கூடாது. இதுபோன்ற அராஜகமான அதிகாரியால் நாட்டுக்கே அவமானம். இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்.


    உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியபோது அவர்கள் வந்து அந்த அதிகாரியிடம் விசாரித்தபோது, அவர்களிடமும் அவர் அவதூறாகவே பேசினார். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரிய வரும். என்னிடம் தகவல் கேட்டால் தருவதற்கு நானும் தயாராக உள்ளேன்.


    தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். உரிய அதிகாரிகள் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.


    இதுபோன்ற காரணங்களால்தான் எந்த தேசிய கட்சியும், தமிழகத்தில் காலூன்ற முடியாமல் உள்ளது. அந்த அதிகாரி என்னிடம் இந்தி பேசுமாறு மட்டும் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, தமிழ் இமிகிரேஷன் கவுண்டர் இருந்தால் அங்கு போகுமாறும் அவதூறாகப் பேசினார்.

    English summary
    A Tamil Nadu based PHd Student has complained that an officer in the Mumbai Airport Immigration counter has asked him to return to Tamil Nadu if he cannot speak in Hindi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X