மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் மேம்பாலம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. 35 பேர் படுகாயம்

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததில் மொத்தம் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பையில் மேம்பாலம் இடிந்து விபத்து..பலர் பலி -வீடியோ

    மும்பை: மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததில் மொத்தம் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    மும்பையில் அடிக்கடி ரயில்வே பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை இரண்டு இடங்களில் ரயில்வே பாலங்கள் இடிந்து விழுந்து பெரிய சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று மூன்றாவதாக மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது.

    Mumbai bridge collapses: Death toll increases to 6 : 35 people got injured

    நேற்று மாலை 7.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்து காரணமாக பாலத்தில் நடந்து கொண்டு இருந்த எல்லோரும் கீழ் விழுந்து, கம்பிகளுக்கு அடியில் சிக்கினார்கள். மக்கள் கூட்டம் அங்கு அதிகமாக இருந்ததால் ஒருவர் மீது ஒருவர் மோதி பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

    Mumbai bridge collapses: Death toll increases to 6 : 35 people got injured

    இந்த நெரிசலிலும், தள்ளுமுள்ளிலும் பல மக்கள் சிக்கி காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு வேகமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இவர்கள் நேற்று இரவு முழுக்க மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    இடிபட்ட பாலத்திற்கு அடியில் மக்கள் நிறைய பேர் சிக்கி இருந்தனர். இவர்களை மீட்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த விபத்து காரணமாக மொத்தம் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    Mumbai bridge collapses: Death toll increases to 6 : 35 people got injured

    இதுவரை மொத்தம் 35 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Mumbai bridge collapses: Death toll increases to 6 after the major accident, 35 people got injured.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X