• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் - 10 ஆண்டுக்குப் பின் காதலன் மீது பெண் புகார்

|

மும்பை: ஆண்களின் மோசடி, நம்பிக்கை துரோகம் பற்றி பாலிவுட், கோலிவுட் என அத்தனை மொழிகளிலும் சினிமா எடுத்தாலும் அப்பாவிப் பெண்கள் பலர் ஆண்களின் வலையில் விழுந்து ஏமாந்துதான் போகின்றனர். கடைசியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தைரியமான சிலரோ காவல்நிலையம் வரை சென்று போராடுகின்றனர். மும்பையைச் சேர்ந்த அந்த நடன அழகியும் அப்படித்தான். தன்னுடைய காதலன் நல்லவன் என்று நம்பி தன்னையே ஒப்படைத்து ஒரு குழந்தையும் பெற்ற பின்னர்தான் அவனது சுயரூபம் தெரியவந்தது. ஏமாற்றிய அந்த காதலன் மீது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பலாத்கார புகார் கூறியுள்ளார்.

புகாருக்கு ஆளான அந்த நபரின் பெயர் பினாய் பாலகிருஷ்ணா என்பதாகும். கட்டிட கான்ட்ராக்டர் வேலை செய்து வந்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு வேலை விசயமான மும்பைக்கு போனார். அப்போது போது அங்கே நடன பாரில் நடனமாடும் அழகியின் மீது பார்வை விழுந்தது. அப்பாவியாக இருந்த அந்த பெண்ணை அனுபவிக்க ஆசைப்பட்டான், அதற்காக காதல் என்ற வார்த்தையை வீசினான் திருமணம் செய்வதாக சத்தியம் செய்தான்.

Mumbai Crime: Woman files case against lover

பாலகிருஷ்ணாவின் சத்தியத்தை உண்மை என்று நம்பி தன்னையே ஒப்படைத்தாள் அந்த பெண். விளைவு கர்ப்பமாகி ஆண் குழந்தை பிறந்தது. காரியம் முடிந்ததும் எப்படி கழற்றி விடுவது என்று யோசித்த பாலகிருஷ்ணாவிற்கு 2010ஆம் ஆண்டு துபாயில் வேலை கிடைக்கவே, மும்பையில் தனி வீடு எடுத்து தங்க வைத்து விட்டு துபாய் பறந்தான். மாதா மாதம் பணம் மட்டுமே அனுப்பினான்.

வருடங்கள் கடந்தன. அந்த பெண்ணின் மகனும் வளர்ந்து பெரியவன் ஆனான். கடந்த 2017ஆம் ஆண்டு நாடு திரும்பிய பாலகிருஷ்ணா, தனது பிசினஸ் நஷ்டமாகிவிட்டதாகவும், தன்னால் வீட்டு வாடகை தர முடியாது என்றும் அந்த பெண்ணிடம் கூறினார். கஷ்டப்பட்டு பையனோடு வாழ்ந்த அந்த பெண்,

ஒருநாள் பாலகிருஷ்ணனின் பேஸ்புக் பக்கத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். காரணம் பாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி குடும்பம் இருந்தது தெரியவந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

மும்பை காவல்நிலையத்திற்கு சென்ற அந்தப்பெண், தன்னை பத்து ஆண்டுகளுக்குப் முன்பு ஒருவன் நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக பலாத்கார புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலகிருஷ்ணாவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டிற்கு தப்பிச்செல்வதை தடுக்க லுக்அவுட் சர்க்குலரும் விடப்பட்டுள்ளது. பொய் சத்தியத்தை நம்பி ஏமாந்த அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The woman filed an FIR against a Kerala man who was already married for allegedly cheating her after making false promises of marrying her.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more