மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால் புறக்கணித்த பள்ளிகள்.. 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மும்பை மாணவி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையை சேர்ந்த மாணவி மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால் பள்ளிகள் புறக்கணித்த நிலையில் அவர் 10ம் வகுப்பு தேர்வில் 90.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று புறக்கணித்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 10ம் மாணவி மம்தா நாயக் வயது 17.இவர் மூளைவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் மற்றவர்களை போல் தெளிவாக பேச முடியாது. நடக்க முடியாது. இதனால் இவரை மும்பையில் உள்ள பள்ளிகள் சேர்த்துக் கொள்ள மறுத்தன.

mumbai git student good marks in10th exam after Cerebral palsy problem

ஆனால் ஒரே ஒரு பள்ளி மட்டும் பரிதாபப்பட்டு மம்தாவை சேர்த்துக் கொண்டது. அங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக படித்தார். இவருக்கு ஒப்பிக்கும் முறையிலான தேர்வுகள் வைக்கப்பட்டது. கணித தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே.. கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே.. கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை

இந்நிலையில் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவி மம்தா 500க்கு 452 மதிப்பண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மூளைவாத நோயால் பாதிக்கப்பட்ட போதும், 90 சதவித மதிப்பெண்கள் எடுத்து சாதித்த மாணவியை பள்ளி நிர்வாகமும், சக மாணவ மாணவியரும் கொண்டாடி வருகிறார்கள்.

மம்தா தற்போது 11ம் வகுப்பில் காமெர்ஸ் பிரிவில் சேர உள்ளாராம். உளவியலில் பட்டப்படிப்பு மேற்கொள்ள ஆசைப்படுகிறாராம். இந்த தகவலை அவரது தாய் நெகிழ்ச்சியோடு கூறினார்.

English summary
mumbai git student good marks in 10 th exam after so many school refused admission for her Cerebral palsy problem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X