மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாடல் அழகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முரண்பாடான வாக்குமூலத்தை அளித்த கல்லூரி மாணவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ

    மும்பை: மாடல் அழகி கொலையில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலத்தை அளித்து வருகிறார்.

    மும்பையை சேர்ந்தவர் மான்ஷி தீக்சித் (20). இவர் மாடல் அழகியாக இருந்தார். இவர் கொலை செய்யப்பட்டு மலாடு என்ற பகுதியில் மாங்க்ரோவ் காடுகளில் ஒரு சூட்கேஸில் முகம் உள்பட உடல் முழுவதும் காயங்களுடன் மான்ஷியின் உடல் கைப்பற்றப்பட்டது.

    Mumbai model killed for refusing sex?

    இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாடல் அழகியை கல்லூரி மாணவர் முசாமில் சையத் (19) கொலை செய்தது தெரியவந்தது.

    அந்தேரியில் இருந்த சையத்தை போலீஸார் கைது செய்தனர். மான்ஷி கொலைக்கான காரணத்தை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் கூறுகையில் மான்ஷியை எனது வீட்டுக்கு வரவழைத்தேன். முதலில் செக்ஸ் உறவுக்கு மறுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரது தலையில் ஸ்டூலால் தாக்கினேன்.

    பின்னர் அவர் மயங்கியதால் பயந்தேன். அவர் மீது தண்ணீர் தெளித்தேன். அவர் காயங்களுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தார். பின்னர் எனது தாய் வந்துவிட்டால் பிரச்சினையாகிவிடும் என்பதால் உடனே அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி, கொலை செய்து கால் டாக்ஸியில் சடலத்தை கொண்டு சென்று வீசினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    காங்கிரஸ் கூட்டணியில் கமல் வந்தால் வரவேற்போம்.. குஷ்பு கருத்து காங்கிரஸ் கூட்டணியில் கமல் வந்தால் வரவேற்போம்.. குஷ்பு கருத்து

    பின்னர் அது கொலைக்கான காரணம் இல்லை என தனது வாக்குமூலத்தை மறுத்துள்ளார். இப்படியே மாறி மாறி வாக்குமூலம் அளித்து வருவதால் குழப்பத்தில் உள்ள போலீஸார் சையத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Muzzammil Syed who was arrested in connection with the murder of a 20-year-old model confessed on Wednesday that he killed her after she denied to have sex with him. But he often changing his statements, police said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X