மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் கடற்படை அதிகாரி மீது கொடூரமாக தாக்குதல்.. சிவசேனா பிரமுகர் உள்பட 4 பேர் கைது

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கேலி செய்து கார்டூனை பகிர்ந்ததாக ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியை கடுமையாக தாக்கிய சிவசேனா முக்கிய பிரமுகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பையின் கொண்டிவாலி கிழக்கில் முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா அண்மையில் மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை கேலி செய்து கார்ட்டூனைப் பகிர்ந்ததற்காக சிவசேனா தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்.

Mumbai Police arrests Shiv Senas shakha pramukh for attack on ex-Navy officer

இந்நிலையில் மதன் சர்மா தாக்கப்படும் வீடியோவை
பாஜக எம்எல்ஏ அதுல் பட்கல்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவில் ஆறு பேர் சேர்ந்து மதன் சர்மாவை கடுமையாக அடித்து உதைக்கிறார்கள். அவரது வீட்டில் இருந்து பிடித்து தரதரவென இழுத்துச்செல்கிறார்கள். அடிக்கடி கண்ணத்தில் அறைகிறார்கள். இப்படியாக வீடியோ இருந்தது.

இது தொடர்பான புகாரை அடுத்து சம்தா நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள், சிவசேனாவின் உள்ளூர் பிரமுகான கமலேஷ் கதம் மற்றும் சிவசேனா தொண்டர் சஞ்சய் மஞ்ச்ரே உள்பட 4 பேரை சம்தா நகர் போலீசார் கைது செய்தனர்.

Mumbai Police arrests Shiv Senas shakha pramukh for attack on ex-Navy officer

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்.. முன்னாள் சிஏஜி உள்பட 4 அதிகாரிகள் வழக்கு தொடர அனுமதி கோரும் சிபிஐவிவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்.. முன்னாள் சிஏஜி உள்பட 4 அதிகாரிகள் வழக்கு தொடர அனுமதி கோரும் சிபிஐ

முன்னதாக மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சி நடிகை கங்கனா ரணாவத் உடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்து தரைமட்டம் ஆக்கியது. இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில் முன்னாள் கடற்படை அதிகாரியை சிவசேனா தொண்டர்கள் தாக்கியிருபபது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A Shiv Sena shakha pramukh has been arrested for allegedly attacking a retired naval officer for forwarding a cartoon that mocked Uddhav Thackeray.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X